districts

img

இஎஸ்ஐ மருத்துவமனையில் செவிலியர் தினம் செவிலியர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய இஎஸ்ஐ முதல்வர்

கோவை, மே 12– சர்வதேச செவிலியர் தினத்தை யொட்டி கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மருத்துவர் கள், நோயாளிகள் அனைவரும் நன்றி தெரிவித்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தின் புளோ ரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 தேதி, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகி றது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்றால் உலக மக்கள் உயிரை காப்பாற்ற செவிலியர்களின் பணி மகத்தான தாக மாறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முன் களப்பணியாளர் களான செவிலியர்களுக்கு சர்வ தேச செவிலியர் தினத்தில் உலகம் முழுவதும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை யில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான மருத் துவமனையான இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப் பட்டது. இதில் புளோரன்ஸ் நைட் டிங்கேலின் உருவப்படத்துக்கு  மருத்துவமனை முதல்வர் ரவிச் சந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவி யும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரி யாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செவிலியர்களிடையே பேசிய மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், மருத்துவர்கள் இடும் கட்டளைகள் மற்றும் அறி வுரைகளை ஏற்று பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவி லியர்கள் அனைவரும் போற்றுத லுக்கு உரியவர்கள் என புகழாரம் சூட்டினார்.  இதைத்தொடர்ந்து உணர்ச்சி வசப்பட்ட மருத்துவமனை முதல் வர் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து, நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி அழுது கண்ணீர் விட்டார். இச் சம்பவம் அங்கிருந்த மருத்துவர் கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்களிடையே நெகிழ்வை ஏற் படுத்தியது.

;