மேட்டுப்பாளையம், டிச.4- கனமழை எச்சரிக் கையால் நிறுத்தப்பட்டி ருந்த மலை ரயில் போக்கு வரத்து மீண்டும் துவங்கி யதால், சுற்றுலாப் பயணி கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் பயணம் செய்ய நாடு முழு வதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரு கின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன் னர் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறி விப்பு வெளியிட்டது. மிக கனமழை பெய்தால் மலை ரயில் பாதையில் மண் சரிவுகள் ஏற்படலாம் என்பதால் பயணிக ளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு (டிச.2 மற்றும் டிச.3) 2 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், மழையின் தீவிரம் குறைந்ததால் மேட்டுப் பாளையத்திலிருந்து உதகைக்கு மலை ரயில் போக்கு வரத்து மீண்டும் புதன்கிழமை முதல் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.