districts

img

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு

மேட்டுப்பாளையம், மே 16- மேட்டுப்பாளையம் அரசு மருத் துவமனையை தரம் உயர்த்தக் கோரி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர். டிஆர். சண் முகசுந்தரம் கோரிக்கை மனு அளித் தார்.  இதுகுறித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவமனை யினை நவீனப்படுத்தி கூடுதல் மருத்துவர்கள் நியமித்து தரம் உயர்த்துவதால் மேட்டுப்பாளை யம் சிறுமுகை காரமடை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்க ளைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள் இதேபோல நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல லட் சம் மக்களும் பயன்பெறுவார்கள் மேலும், கோவை அரசு மருத்துவ மனைக்கு நெருக்கடி குறையும்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த மேட் டுப்பாளையம் அரசு பொது மருத்து வமனை தற்பொழுது மேட்டுப் பாளையம் சிறுமுகை காரமடை சுற் றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிரா மப் பகுதிகளில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களும் பில்லூர் மலை கிராமங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் என மூன்று லட்சம் மக்களின் உயிர்காக்கும் சிகிச்சைக் காக இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஏழை எளிய கர்ப்பி ணிப் பெண்களுக்கு வரப்பிரசாத மாக இந்த மருத்துவமனை திகழ் கிறது இதுமட்டுமல்லாமல் மேட் டுப்பாளையத்திலிருந்து உதகை வரை செல்லும் சாலையில் ஏற்படக் கூடிய விபத்துகளில் சிக்கி படுகா யம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மேட்டுப்பாளையம் மருத்துவமனை முக்கிய பங்கு  வகிப்பதால் இந்த மருத்துவம னையை நவீனப்படுத்தினால் உயிர் காக்கும் உயர்தர சிகிச்சை மேட்டுப் பாளையம் மருத்துவமனையி லேயே அளிக்க முடியும்

தற்போது உள்ள நிலையில் மருத்துவமனை வளாகத்தில் காலியிடங்கள் அதிக ளவு உள்ளதால் கூடுதல் கட்டிடங் களை கட்டி சிறப்பு சிகிச்சை பிரிவு கள் உருவாக்கி நவீன மருத்துவ உபகரணங்கள் அமைத்து கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் நிய மித்து ளதரம் உயர்த்துவதால் மேட்டுப்பாளையம் நகரத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது தற்போது நீலகிரி மாவட்டத் தில் உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெற நல் வாய்ப்பாக அமை யும். மேலும், தற்போதைய சூழ்நி லையில் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அவசரகால சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் கோவை அரசு மருத்து வக் கல்லூரியில் இடநெருக்கடி ஏற் படுவது உரிய சிகிச்சையை மக்கள் பெற முடியாமலும் பாதிக்கப்படு கிறார்கள்

எனவே, மேட்டுப்பாளை யம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தி நவீன வசதிகள் ஏற்படுத்து வதன் மூலமாக மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மூன்று லட்சம் மக்களும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு உரிய சிகிச்சையை மேட்டுப்பாளையத்தில் அளிக்க முடியும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தாங்கள் என்னுடைய கோரிக்கை கனிவுடன் பரிசீலித்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.  மேலும்,  இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் மனுவில் குறிப் பிட்டுள்ள விஷயங்களை முழுமை யாக படித்து அதன் பின்னர் இது குறித்து குறித்து உடனடி நடவ டிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டார்.   

;