districts

img

கல்லீரல் நோய் விழிப்புணர்வு

கோவை, பிப்.13- கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை வளாகத்தில் சிறப்பு கல்லீரல் ஆதரவு குழு சார்பில் கல்லீரல் நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், கல்லீரல் நோய் இருப்பது அல்லது கல்லீரல் நோய் அறிகுறிகள் உள்ள நோயாளிகள் மற்றும் கல்லீரல் நோய் வருவதற்கான அபாயம் உள்ள நபர்கள். மேலும், நீண்ட காலமாக மது அருந்துவோர், உடல் பருமன் அல்லது அதிக எடை உள்ளவர்கள். நீண்டகாலமாக நீரிழிவு நோய் உள்ள  நோயாளிகளின் நலன்களுக்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், இவர்களுக்காக கல்லீரல் ஆதரவு குழு திட்டத்தின் கீழ் கல்லீரல் சுகாதார பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. மாதேஸ்வரன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை  மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுண்டப்பன், மருத்துவ இரைப்பை குடல் மற்றும் ஹெபடா லஜி நிபுணர் டாக்டர் பி. கார்த்திகேயன், காஸ்ட்ரோ என்டா லஜி, ஹெபடாலஜி மற்றும் இன்டர்வென்ஷனல் எண்டோஸ் கோபி நிபுணர் டாக்டர் பி. திருமால், ஆலோசகர் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் பங்கேற்ற னர்.