districts

img

ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தினால் எல்ஐசி பாதுகாக்கப்பட்டு வருகிறது பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேச்சு

கோவை, ஜன. 19– இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஒன்றுபட்ட உறுதியான போராட்டத்தின் காரணமா கவே எல்ஐசி பாதுகாக்கப்பட்டு வருகிறது என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறினார். இந்திய நாட்டின் பொதுத்துறை நிறு வனமான இன்சூரன்ஸ் நிறுவனம் துவக்கப் பட்டு 64 ஆண்டுகள் நிறைவடைந்து 65 ஆம் ஆண்டு துவங்குகிறது. இதனை யொட்டி எல்ஐசியின் 64 ஆம் ஆண்டு நிறைவு நாள் செவ்வாயன்று நாடு முழுவ தும் உள்ள எல்ஐசி கிளைகள் முன்பு ஊழி யர்கள் உறுதிமொழியேற்போடு கொண்டா டப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவை – திருச்சி சாலை எல்ஐசி கோவை கோட்ட அலுவலகம் முன்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப் போது அவர் பேசியதாவது, பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மக்களை கவர பல்வேறு கவர்ச்சி விளம்பரங்களை காட்டி போட்டியில் நின்றாலும் இந்திய மக்களின் பேராதரவை பெற்ற நிறுவனமாக பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி திகழ்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் எல்ஐசியை தனியார்மயமாக்கும் முயற்சிகள் ஆளும் அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் இந்நிறுவனம் பாதுகாக் கப்பட்டு வருகிறது. ஊழியர்களின் அர்ப் பணிப்பு மிக்க பணிதான் இந்த எல்ஐசியை தூக்கி நிறுத்தியுள்ளது. ஏனெனில், தனியார்துறைக்கு லாபம் ஒன்றைத்தவிர வேறு எதுவும் தெரியாது. ஆகவே, நஷ்டத்தில் இருக்கும் எந்த அரசு நிறுவனங்களையும் எவரும் வாங்கமாட் டார்கள். கோடிக்கணக்கில் லாபம் கொடுக் கிற எல்ஐசி போன்ற பொதுத்துறைகளை வாங்குவதற்கு பலர் முனைப்பு காட்டி வரு கின்றனர். மத்திய அரசும் இப்படியான தொடர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரு கிறது.

இதற்கெதிரான மிகப்பெரிய போராட்ட பலத்தினால் எல்ஐசி பாது காக்கப்பட்டுள்ளது.  எல்ஐசி மட்டுமல்ல, அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் பாதுகாப்போம். இந்தியாவின் பொதுத்துறைதான் இந்த தேசத்தை பாதுகாக்கும் என்பது சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத் தில் நமக்கு உணர்த்தியுள்ளது. அத்தகைய போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மக்களவையில் குரல் எழுப்புவதோடு, மக் கள் திரட்டி நடைபெறும் போராட்டத்திலும் முன்நிற்பேன் என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க கோவை கோட்ட தலை வர் எம்.கஜேந்திரன் தலைமை வகித்தார். மேலும், ஊழியர் சங்க தலைவர்கள் எம். கிரிஜா, துளசிதரன், சுரேஷ் மற்றும் திர ளான ஊழியர்கள் பங்கேற்றனர்.

;