districts

img

நிலையான வேலை விதிமுறைகளை வகுத்திடுக

ஈரோடு, ஆக. 21- மருந்து விற்பனை பிரதிநிதிக ளின் வாழ்நிலையினை கருத்தில்  கொண்டு நிலையான வேலை விதி முறைகளை வகுத்திட வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதி நிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மருந்து விற்பனை பிரதிநிதிகள்  70 ஆண்டுகளுக்கு மேலாக  இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்ற னர். தற்போது, இத்தொழிலில்,  பல சிக்கல்கள் எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான வேலை  இழப்புகள், டிஜிட்டல் முறைகளால்  அதிக வேலைப்பளு ஏற்படுகிறது.  நாடு முழுவதும் பல லட்சக்கணக் கான மருந்து விற்பனை பிரதிநிதி கள் இத்தொழிலில் ஈடுபட்டிருந் தாலும், இவர்களுக்கென இது வரையில் நிலையான வேலை  விதிமுறைகள் உருவாக்கப்பட வில்லை. எனவே, கடந்த, 2017  ஆகஸ்ட் 10 இல் நடந்த முத் த்தரப்பு கூட்டத்தில் இயற்றப் பட்ட தீர்மானத்தின் அடிப்படை யில், விற்பனை அபிவிருத்தி பணி யாளர்கள் சட்டம் பிரிவு, 12ன் கீழ்  வரையறுக்கப்பட்டுள்ள நிலை யான வேலை விதிமுறைகளை, விற்பனை அபிவிருத்தி பணியாளர் களுக்கும் வகுக்க வேண்டும். அதனை மாநில அரசால் அமல்ப டுத்த வேண்டும். இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களை தண்டிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் நான்கு சட்ட தொகுப்புகளைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது.  தமிழ்நாடு மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங்கத்தின் ஈரோடு கிளையின் சார்பில் ஈரோடு  சூரம்பட்டி நால் ரோட்டில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு கிளை தலைவர் சுரேஸ்பாபு தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம் தொடக்க  உரையாற்றினார். சங்க செயலாளர்  சங்கரன் கோரிக்கைகளை விளக் கிப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் நிறை வுரையாற்றினார். முடிவில், பொரு ளாளர் கோபிநாத் நன்றி கூறினார்.