ஈரோடு, ஆக.2- ஈரோடு வன மண்டலத்தில், கால நிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக் கல் திட்டப்பணிகள் குறித்து, ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை - இந் தியா குழுவினர் ஆய்வு மேற்கொண் டனர். ஈரோடு வன மண்டலத்தில் ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனூர் உள்ளிட்ட வன விரிவாக்க கோட்டங்கள் உள்ளன. இக்கோட்டங்களில் காலநிலை மாற்றத் திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாது காப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத் தின் 2 ஆம் கட்ட பணிகள் 2022 -23 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள நகர் மற்றும் நகரை ஒட்டிய பகுதிகளில் உய ரமான செடிகளை நடவு செய்தல், களப் பணியாளர்களுக்கு பசுமை வாகனங் கள் வழங்குதல், நவீன அளவீடு கருவி கள் வழங்குதல், மனித - விலங்கு மோதலை தடுத்தல், விலங்குகளின் வாழ்விடம் மேம்படுத்துதல், களப்பணி யாளர்களுக்கு குடியிருப்பு கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்ப டுகின்றன. தற்பொழுது வரை நடை பெற்று வரும் பணிகள் குறித்து ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை - இந்தியா அலுவலர்களான வாக்கமாச்சு இய்ஜி, முதுநிலை பிரதிநிதி சித்தார்த் பரமேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய் தனர். அதன்படி, புஞ்சை புளியம்பட்டி அருகில் 2 விவசாயிகள் நிலத்தில் நடவு செய்யப்பட்ட 3 ஆயிரம் மலைவேம்பு, தேக்கு, சிவப்பு சந்தனமரம் உள்ளிட்ட மரங்களையும், சத்தியமங்கலம் அரசு சந்தனமர கிடங்கில் களப்பணியாளர் களுக்கு வழங்கப்பட்ட 7 மின்சார இரு சக்கர வாகனங்களையும், 3 நவீன அளவீட்டு கருவிகளையும், நெய்தாளபு ரத்தில் 5 கி.மீ தூரத்திற்கு அமைக்கப் பட்ட யானைபுகா அகழி மற்றும் சூரிய மின்வேலிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதன்பின் தாளவாடி வனச்ச ரக அலுவலகத்தில் கோடம்பள்ளி சூழல் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்கள் மற் றும் தடம் குழு உறுப்பினர்களுடன் கலந் தாய்வு கூட்டம் நடத்தி, இத்திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற நன்மைகள் மற் றும் அவர்களின் கோரிக்கைகள் ஆகிய வற்றை கேட்டறிந்தனர். இக்கூட்டத்தில், கோடம்பள்ளி சூழல் மேம்பாட்டு குழு வைச் சார்ந்த 8 பெண்களுக்கு ஆரி எம்பராய்டிங் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை யும் மற்றும் 4 பழங்குடி பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை யும், ஓட்டுநர் பயிற்சி பெற்ற 12 பழங் குடி இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரி மங்கள் வழங்கப்பட்டன. இதேபோல, பவானிசாகர் வனச்ச ரகத்தின் தெக்கத்திமலையில் கோடை காலங்களில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்க சூரிய சக்தியில் இயங் கும் ஆழ்துளை கிணறு பணிகளையும், கேர்மாளம் வனச்சரகத்தில் அமைக்கப் பட்ட 30 ஹெக்டர் புல் தோட்டம் அமைப்பு பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது.