districts

img

கோவை திருச்சி சாலையில் நடைபெற்று வரும் மேம்பால பணி தீவிரம்

கோவை, ஏப்.18-

கோவை – திருச்சி சாலையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம் பால பணிகள் தீவிரமடைந்துள்ளது. கோவை – திருச்சி சாலையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு  மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. கோவை – திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியில் துவங்கி பங்குசந்தை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 111 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக 17.20 மீட்டர் அகலத்தில் அமைப்படுகிறது. அதில், சுங் கம் பகுதியில் மட்டும் மேம்பாலத்தின் அகலம் 19.60 மீட்டராக உள்ளது. இந்த மேம்பாலம் கட் டும் பணி கடந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கொரோனா முழு பொதுமுடக் கம் காரணமாக பாதிக்கப்பட்டது. அதன் பின் னர் வேகமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த மேம்பாலத்தின் 80 சதவிகித பணிகள் நிறைவடைந்து விட்டது. மேம்பாலத்தின் இருபுறமும் இறங்குதளம் அமைக்கும் பணியும், சுங்கம் பகுதியில் 19.60 மீட்டர் அகலத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி மட்டும் தற்போது நடைபெற்று வரு கிறது.  

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் கூறுகையில், கோவை – திருச்சி சாலையில் சிங்காநல்லூரில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடம் வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்ல வசதியாக சுங்கம் – உக்கடம் சாலையில் 400 மீட்டர் தூரத்திற்கு இறங்கு தளம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக காங்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறை வடைந்து விட்டது. 2 வாகனங்கள் செல்லும் வகையில் 8.50 அகலத்தில் இந்த இறங்கு தளம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பால பணிகள் அனைத்தும் இன்னும் 4 மாதத்தில் முழுவதும் முடிக்கப்பட்டு விரைவில் பயன் பாட்டிற்கு திறக்கப்படும். பாலத்தின் இருபுற மும், உக்கடம் சாலையிலும் இறங்குதளம் மட்டும் அமைக்க வேண்டிய பணிகள் உள் ளது. இந்த பணி முடிந்ததும் மேம்பாலத்தின் கீழே புறவழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும். இவ்வாறு அதிகாரிகள் கூறி னர்.

;