districts

img

கோவை: ரூ.203 கோடி மதிப்பீட்டில் மின்வாரியப் பணிகள்

கோவை, அக்.23–  கோவையில் ரூ.203 கோடி மதிப் பீட்டில் மின்வாரிய பணிகள் நடை பெற்று வருவதாக அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தெரிவித்தார்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மற்றும் கொரோனா தொற் றால் பெற்றோர்களை இழந்த குழந் தைகளுக்கு நிவாரண நிதி வழங் குதல் ஆகிய நிகழ்வுகள்  நடைபெற் றது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண் முகசுந்தரம் மற்றும் கோவை  மாவட்ட ஆட்சியர், கோவை மாநக ராட்சி ஆணையர், மாவட்ட வரு வாய் அலுவலர் ஆகியோர் பங் கேற்று பயனாளிகளுக்கு காசோலை மற்றும் மின் இணைப்பு  ஆணைகளை வழங்கினர்.  இதன்பின் அமைச்சர் வி.செந் தில்பாலாஜி கூறுகையில்,   கோவை  மாவட்டத்தை பொறுத்தவரை 8,905  மின்மாற்றிகளை மாற்றும் பணிகள்  நடைபெற்று வருகின்றது. கோவை  மாவட்டத்தில் ரூ.203 கோடி மதிப் பில் மின்வாரியம் சார்பில் பணிகள்  நடைபெற்று வருகின்றது. தமிழகத் தில் தேவைக்கும், உற்பத்திக்கு மான இடைவெளி 2,500 மெகா வாட்டாக இருக்கின்றது. இந்த இடைவெளியை குறைக்க சூரிய  மின்சக்தி, கேஸ் மின் உற்பத்தி ஆகி யவற்றை அதிகப்படுத்தவும், ஏற்க னவே திமுக ஆட்சியில் திட்டமிடப் பட்டு செயல்படுத்தாமல் வைத்தி ருக்கும் திட்டங்கள் செயல்படுத்த வும் நடவடிக்கை எடுக்கப்படுகின் றது. மின்வாரியத்தில் 1.46 லட்சம்  பணியிடங்களில் 56 ஆயிரம் பணி யிடம் காலியாக இருக்கின்றது. இதனை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  மேலும், கோவையில் சூயஸ்  குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு கூட் டத்திற்கு பின்பு முதல்வர் கவனத் திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக் கைகள் எடுக்கப்படும் என தெரிவித் தார். 

 பி.ஆர்.நடராஜன் 

கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், கோவை லட்சுமில் அருகே உள்ள  பாரதி புரத்தில் உள்ள குடியிருப்புக ளுக்கு மேலே டவர் லைன் செல்கி றது. இதன் காரணமாக அங்குள்ள  மக்கள் புதுப்பித்தோ அல்லது புதிய  வீடுகளையோ கட்டமுடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். பல ஆண்டுகளாக இந்த கோரிக் கையை முன்வைத்து வருகிறார் கள். இதனை உடனே  அமைச்சர் அவர்கள் தலையிட்டு மேலே செல் லும் டவர் லைனை பூமிக்கடியில் கேபிள் மூலம் கொண்டு சென்று  நடவடிக்கை எடுக்க வேண்டுமென் றார்.  இந்நிகழ்வில் கோவை மாநகர்  கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பா ளர் நா.கார்த்திக், மாநகர் மேற்கு  மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர். கிருஷ்ணன், புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை  சேனாதிபதி மற்றும் அரசு அதிகாரி கள் பலர் கலந்து கொண்டனர்.
 

;