districts

img

பொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 29–  பொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பாரபட்சமில்லாமல் ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.  கார்ப்பரேட் கொள் ளைக்காகவே ஒன்றிய அரசு தனியார் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து தடுப்பூசி வாங்குகி றது. அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசியை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யலாம் எனவே. தமிழகத்தில் உள்ள  பொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா  தடுப்பூசி உற்பத்தியை துவங்கிட தமிழக அர சிற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவி தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 29 அன்று மாநிலம் தழு விய போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுத்திருந் தது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் வாலி பர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட நிர்வாகி விவேக் தலைமை தாங்கினார். ஒன்றிய அரசின் நட வடிக்கைகளை கண்டித்து மாவட்ட செயலா ளர் கே.எஸ்.கனகராஜ் கண்டன உரையாற்றி னார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தடுப்பூசி தட்டுப்பாட்டை சரி செய்து தேவைக்கு ஏற்ப தமிழகத்திற்கு வழங்க வேண்டும். வாய்ச்சொல் வீராங்கனை வானதியே தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி இன்னும் வரவில்லையே என்கிற முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க நிர்வாகிகள் அர்ஜூன், மணி பாரதி, ராஜா, சரவணன் உள்ளிட்ட ஏராள மான இளைஞர்கள் பங்கேற்றனர்.  

சேலம்

சேலம் ஜங்ஷன் தலைமை தபால் நிலை யம் முன்பு  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு வாலிபர் சங்க மாநகர மேற்கு தலை வர் கண்ணதாசன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன், மாநகர மேற்கு செயலாளர் ஜெகநாதன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.ஞானசவுந்தரி, சிபிஎம் மாநகர மேற்கு செயலாளர் எம். கனக ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பி. பாலகிருஷ் ணன், மாநகர குழு உறுப்பினர் பிரகாஷ் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் கே.லோக நாதன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி கள் ஏ.ஜிவானந்தம், சபரி மணிகண்டன்,எம்.சிலம்பரசன், கே.ரமேஷ், சிவப்பிரகாசம், செந் தில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னாள் மாவட்டத் தலைவர் வே. விஸ்வநாதன் வாழ்த்தி பேசினார்.

ஈரோடு

ஈரோடு தாலுக்கா மூலப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ஆண்ட்ரூ தலைமை வகித் தார். வாலிபர் சங்கத்தின் தாலுக்கா ஒருங் கினைப்பாளர் அன்பு ஜனாதிபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பாலசுப்பிரமணி யன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு  உறுப்பினர் க.ராஜ்குமார், மூலப் பாளையம் கிளைச் செயலாளர் சதிஷ் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.

;