உடுமலை, ஆக.9- கேரள மாநிலம், வயநாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில், அரசு ஊழியர் சங்கத்தினர் உடுமலையில் வியாழனன்று உண்டியல் வசூல் மூலம் ரூ.30.180 நிதி திரட்டினார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடம் வய நாட்டில் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்டபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை கிளையின் சார்பில் உடுமலை நகராட்சி அலுவல கம், மாவட்ட வனத்துறை அலுவலகம், ஊராக வளர்ச்சித் துறை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு கலைக்கல்லூரி என அனைத்து அரசு அலுலகங்களிலும் சங்கத்தினர் உண்டியல் வசூல் செய்தார்கள். இது குறித்து சங்கத்தினர் தெரிவிக்கையில், உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில் இருக்கும் அனைத்து அரசு அலுவ லகத்திலும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இரண்டு நாட்கள் உண்டியல் வசூல் செய்தோம். இரு தினங் கள் வசூல் செய்த நிதி ரூ.30.180 ஐ அரசு ஊழியர் சங்கத்தின் தலைமைக்கு தர உள்ளோம் என்றனர். முன்னதாக உண்டியல் வசூல் இயக்கத்தை அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாலகி ருஷ்ணன் துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்கத்தின் உடு மலை வட்டக்கிளை செயலாளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் செல்லமுத்து, கருப்புசாமி, கனகராஜ், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.