districts

img

முறைசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு ரூ.2 லட்சமாக உயர்த்துக

உடுமலை, ஆக.7- முறைசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு தொகையை ரூ.2  லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டு மென உடுமலை தாலுகா பொதுத் தொழி லாளர் சங்கத்தின் 7ஆவது மகாசபைக்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.  சிஐடியு  உடுமலை தாலுகா பொதுத்  தொழிலாளர் சங்கத்தின் 7ஆவது மகாசபை ஞாயிறன்று சங்க அலுவ லகத்தில் நடைபெற்றது. தாலுகா தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கி னார். முன்னதாக, சங்க கொடியை கமிட்டி உறுப்பினர் சண்முகம் ஏற்றி வைத்தார். துணை செயலாளர் பாபு  அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். துணை தலைவர் சாமிதுரை வர வேற்று பேசினார். கமிட்டி உறுப்பி னர்கள் அபுபக்கர் சித்திக், ராஜிக் அலி முன்னிலை வகித்தனர். மகாசபையை சிஐடியு திருப்பூர் மாவட்டத் துணை செயலாளர் சம்பத் துவக்கிவைத்தார். சிஐடியு நிர்வாகிகள் விஸ்வநாதன், கனகராஜ், ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வாங்கினர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி தொழிலாளர்கள் கூறும் புகார் மீது  உடுமலை தொழிலாளர் உதவி ஆய் வாளர் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பகுதி உள்ள சிறு  மற்றும் பெரிய நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு சட்ட படியான சம்பளம், பணி பாதுகாப்பு மற்றும் இஎஸ்ஐ , பிஎப் உள்ளிட்ட சட்ட படியான பாதுகாப்பை உறுதி படுத்த  வேண்டும். முறைசாரா தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு  ரூ.2 லட்சமாக உயர்த்தி  வழங்க வேண்டும். சலவைத் தொழிலா ளர்களுக்கு நவீன ஸ்மார்ட் இஸ்திரி பெட்டி வழங்க வேண்டும். நலவாரியத் தில் பதிவு செய்த அனைத்து தொழிலா ளர்களுக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களுக்கு சட்ட பாது காப்பு வழங்க வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் நல வாரிய கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதம் ஒரு முறை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு இந்த மாநாட்டில் தலைவராக ரங்கநாதன், செயலாளராக ஜெகதீ சன், பொருளாராக ஜோசப், துணை தலைவர்களாக சாமிதுரை, அம்ச வேணி, துணை செயலாளராக பாபு, சாதிக் அலி ஆகியோர் தேர்வு செய்ய பட்டனர்.  சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் நிறைவுரையாற்றினார்.

;