உடுமலை, டிச.14- திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதி களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய் ததால், காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இத னால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக் குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட (பிஏபி) தொகுப்பு அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு பாலாறு மற்றும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து, காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங் களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுகிறது. மேலும், உடுமலை நக ராட்சி மற்றும் உடுமலை ஒன்றியம், குடிமங்க லம் ஒன்றியம் மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவ தால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரு கிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில் 52.50 அடியாக உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3327 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பிஏபி 2 ஆம் மண்ட லத்திற்கு பிரதான கால்வாய், உடுமலை கால் வாய் மற்றும் குடிநீர் என வினாடிக்கு 958 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்திமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அணை நிரம்பி உபரி நீர் பாலாற்றில் திறக்க வாய்ப்புள்ளது. எனவே பாலாற்றின் வழியோர கிராமங்க ளுக்கும், கேரள மாநிலம் சித்தூர், ஒலவங் கோடு உள்ளிட்ட வழியோர மக்கள் எச்சரிக் கையாக இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடைசி யாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி உபரி நீர் பாலாற்றில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருமூர்த்தி அணையில் நீர் நிரம்பியுள்ள நிலையில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான உப்பாறுக்கு அணைக்கும் நீர் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர். தற்பொழுது உப்பாறு அணையின் மொத்தம கொள்ளளவான 24 அடியில் 12.70 அடி தண்ணீர் மட்டுமே உள் ளது.