districts

img

உடுமலை அருகே வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு: கால்நடைகளுடன் விவசாயிகள் முற்றுகை

திருப்பூர், ஆக. 18 - ஆக்கிரமிக்கப்பட்ட வண்டிப் பாதையை  மீட்டுத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கா ததால், விவசாயிகள் கால்நடைகளுடன் உடு மலைபேட்டை தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். உடுமலை அருகே போடிபட்டி சுண்டக் காம்பாளையம்  பகுதியில் 200 ஆண்டு கால  வண்டிப் பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து  மீட்டுத் தரக் கோரி விவசாயிகள் 30க்கும் மேற் பட்டோர் ஆடு, மாடுகள் மற்றும் டிராக்டர்களு டன் புதன்கிழமை மாலை உடுமலை தாலுக்கா  அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சுண்டக்காம்பாளையத்தில் விவசாய நிலங்க ளுக்குச் செல்லும் பிரதான வண்டித்தடம் உள் ளது. விவசாயிகள் பாரம்பரியமாக பல நூறு  ஆண்டுகள் இப்பாதையை பயன்படுத்தி வரு கின்றனர். அரசு ஆவணங்களில் வண்டிப்  பாதை அரசுக்குச் சொந்தமானது என உள்ள  நிலையில் தனியார் ஒருவர் இதை ஆக்கிர மித்து வழித்தடத்தை அழித்து உழவு செய்து  விவசாய நிலமாக மாற்றியுள்ளார். இதனால் மற்றவர்களின் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமலும், இடுபொருட்கள் கொண்டு செல்ல வழியில்லாமலும் விளை பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இது பற்றி விவசாயிகள் பல முறை முறை யிட்ட நிலையில், வட்டாட்சியர் வண்டிப் பாதையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டார். ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்குப் பாதையை அளந்து விடாமல் ஒரு மாத கால மாக வருவாய்த் துறையினர் விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர். 

இதனால், வண்டிப் பாதையை ஆக்கிர மித்து வைத்துள்ளவர் அந்த பாதையில் வண்டி, வாகனம் ஆடு, மாடு, பொது மக்கள்  என யாரையும் செல்ல விடாமல் தகராறு செய்யும் நிலை உள்ளது. எனவே ஆடு, மாடு களுடனும் டிராக்டர் வாகனத்துடனும் உடு மலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடு படுவதாக தெரிவித்தனர். விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து காவல் துறையி னர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.  வருவாய்த் துறையினருடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோட்டாட் சியர் அலுவலகத்தில் முத்தரப்புப் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்றி வண்டிப் பாதை மீட்கப்படும் என உறுதியளிக் கப்பட்டது. இதன் பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.அதன்படி வியாழக்கி ழமை கோட்டாட்சியர் அலுவலகத்தில் முத்த ரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில்  வண்டிப்பாதையை சொந்தம் கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் தனியார், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற் றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் ஏற்கெ னவே உள்ளபடி விவசாயிகள் வழக்கம் போல் வண்டிப் பாதையை பயன்படுத்த அனு மதிப்பது, அதே சமயம் சாலை பணி செய்யக்  கூடாது என்றும் முடிவு காணப்பட்டது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கீழ்  பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராடிய நிலையில், வியாழக்கிழமை பேச்சுவார்த்தை யில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மட்டும் பங் கேற்க வேண்டும் என்று சொல்லி அவர்களது  அலைபேசிகளை அணைத்து வைத்து, சங்க  நிர்வாகிகள் பங்கேற்காதபடி செய்து அதிகா ரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எனி னும் தங்கள் கோரிக்கை நிறைவேறி இருப்ப தாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

;