வனவிலங்குகளால் பாதிப்பு: உடுமலையில் 22ல் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
திருப்பூர், ஜூலை 16 - வனவிலங்குகளால் பாதிப்பைச் சந்திக்கும் விவசாயிக ளுக்கு உரிய இழப்பீடு கோரி உடுமலையில் ஜூலை 22 அன்று பெருந்திரள் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு கூட்டம் செவ்வாயன்று காலை திருமுருகன்பூண்டி அலுவல கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் ஆர்.குமார் வேலையறிக்கை முன்வைத்தார்.
இக்கூட்டத்தில், தொடர்ந்து வனவிலங்குகளால் பாதிக் கப்படும் விவசாயிகளுக்கு பயிர் இழப்பிற்கு உரிய நிவார ணம், உயிர் இழந்தால் ரூ.24 லட்சம் வழங்க கேட்டு, வரும் 22ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் எதிரில் நடத்துவது. இதில் விவசாயிகளை சக் தியாக திரட்டி பங்கெடுக்க வைப்பது என முடிவு செய்யப் பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் அ.பாலதண்ட பாணி, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வெங்கடாசலம், வை.பழனிசாமி, துணைத் தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி உட்பட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டார்கள்.
குற்றவியல் சட்டத் திணிப்பு தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
குற்றவியல் சட்டத் திணிப்பு தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம் அண்ணா சிலை முன்பு திங்களன்று தாராபு ரம் நகர கிளை செயலாளர் எஸ்.கண்ணுசாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கி.சீரங்கராயன், கே . மேகவர்ணன், பி.பொன்னுச்சாமி, கட்சியின் தாலுகா செயலா ளர் என்.கனகராஜ் ஆகியோர் பேசினர். இதில் பங்கேற்றோர் ஒன்றிய அரசின் எதேச்சதிகார நடவடிக்கையைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
காமராஜர் பிறந்தநாள் விழா: அரசுப் பள்ளிக்கு பீரோ வழங்கல்
திருப்பூர், ஜூலை 16 - காமராஜர் 122ஆம் பிறந்தநாள் விழா திங்க ளன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரவையின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கண்ணப்பன் தலைமையில், அப்பியாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு பீரோ, மின்விசிறி மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிக ளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. அப்பள்ளியில் காம ராஜர் திருஉருவப்படத் திற்கு மாவட்ட தலைவர் கண் ணப்பன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். மாவட்ட செயலாளர் காசிராஜன். மாவட்ட பொரு ளாளர் சாமி, கௌரவ தலை வர் பிரகாஷ், மகளிர் அணி தலைவி பத்மாவதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.