districts

img

வேலை கேட்டு இளைஞர்கள் சைக்கிள் பயணம் திருமுருகன் பூண்டியில் உற்சாக வரவேற்பு

காஞ்சிபுரம். ஏப்.24- காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியில் சென்னை யிலிருந்து புறப்பட்ட வாலிபர் சங்க பிரச்சார பயணக்குழுவுக்கு உற்சாக வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. “இளைஞர்களுக்கு வேலை கொடு”என்ற முழக்கத்தோடு சுட்டெ ரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாலி பர்கள் தங்களது 3 வது நாள் சைக்கிள் பிரச்சாரத்தை தொடர்ந்தனர். சென்னை, புதுச்சேரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 4 முனைகளிலிருந்து திருச்சி  நோக்கி 3000 கி.மீ சைக்கிள் பயணம் ஏப்ரல் 21 அன்று தொடங்கியது. இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் இந்த பிரச்சாரத்தை மேற் கொண்டுள்ளது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையிலான சென்னை குழுவினர் சனிக்  கிழமையன்று (ஏப்.23) தென்சென்னை மாவட்டம், தம்பரத்திலிருந்து காஞ்சி புரம் மாவட்டம் மூடிச்  சூருக்கு வந்தது. இந்த பிரச்சாரத்தை கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செய லாளர் சி.சங்கர், குன்றத்தூர் வட்டச் செயலாளர் எம்.எஸ்.ராஜா, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் துணை செயலாளர் எம்.ராஜா உள்ளிட்டோர் பழங்கள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தக்குழு லட்சுமி நகர், மண்ணிவாக்கம், கர சங்கால், கீழ்படப்பை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டது.  பிரச்சாரக் குழுவினரை பொதுத் தொழிலாளர் சங்கம், ஹூண்டாய் தொழி லாளர் சங்கம், தமு எகச, மாதர் சங்கத்தினர் ஆங்காங்கே வரவேற்றனர். படப்பை பஜாரில் வர வேற்பு பொதுகூட்டம் நடை பெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி.எல்.கார்த்திக் தலைமை வகித்தார்.பி.ரமேஷ் வரவேற்றார்.

பயணக்குழு தலை வரும், சங்கத்தின் மாதிலச் செயலாளர் எஸ்.பாலா கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு துணை பொதுச் செய லாளர் எஸ்.கண்ணன் சிறப்பு ரையாற்றினார். விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கே.நேரு, சிஐடியு மாவட்ட நிர்வாகி எஸ்.திருஞானம், எஸ்.சுகுந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வாலிவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.உதயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் சி.பாலமுருகன், எஸ்.செல்லப்பன், எஸ். பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டப் பொரு ளாளர் வி.சண்முகபாபு நன்றி கூறினார். 4ஆவது நாள் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்றத்தூர் வட்டக்குழு உறுப்பினர் கே.முருகன் தொடங்கி  வைத்தார். இந்தக்குழு கீழ்படப்பை, சமத்துவபுரம், வண்டலூர் வழியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்ற டைந்தது.