districts

ஜன.18-ல் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம்

கோவை. ஜன.5- இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் வரும் ஜன.18 ஆம் தேதி முதல் ஜன.30 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் இயக்கு னர் (ஆள்சேர்ப்பு) கர்னல் ராபர்ட், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாந கராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, வரு வாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம் மற் றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி,  ஈரோடு,  கிருஷ்ணகிரி,  தரும புரி,  சேலம்,  நாமக்கல்,  திண்டுக்கல்,  மதுரை, தேனி,  திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 11 மாவட்டத்தில் இருந்து ஆட்களை ராணு வத்தில் சேர்ப்பதற்கான முகாம் ஜன.18 ஆம் தேதி முதல் ஜன.30 ஆம் தேதி வரை பார தியார் பல்கலைக்கழக விளையாட்டு அரங் கில் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கு இணையம் வழியாக ஏற்கனவே விண்ணப் பித்திருந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  நுழைவுச்சீட்டு ஜன.1 ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. நுழைவுச்சீட்டு கொண்டு வரும் தேர்வாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதிக அளவி லான நபர்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு 500 நபர்கள் கொண்ட குழு வாக நான்கு வெவ்வேறு இடங்களில் அனு மதிக்கப்படுவார்கள். முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு தனியாக முகாம் டோக் கன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் யாரும் வேலை பெற்றுத் தருவதாக கூறும் மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். தகுதி யின் அடிப்படையில்தான் இந்த தேர்வு நடைபெறும். எனவே இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூட்டத்தில் ஆட்சியர் கு.இராசாமணி தெரி வித்தார்.

;