districts

தற்காலிக மருத்துவ பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை, ஜூலை 27- மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணி யாற்ற மருந்தாளுனர்கள், ஆய்வுக்கூட நுட்புனர் மற்றும் நுண் கதிர் படபிடிப்பாளர்கள் பணிக்குத் தகுதியானவர்கள் விண் ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் பெ.கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ்  இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர் மற்றும் நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளுக்குத் தற்காலிகமாக மாதம் ரூ.12 ஆயி ரம் வீதம் 6 மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்தப்பட உள்ளனர். அதன்படி மருந்தாளுநர் 17 பேரும், ஆய்வக நுட்புனர் 17 பேரும், நுண்கதிர் படப்பிடிப்பாளர் 17 பேரும் தேவைப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களுக்குரிய தகுதியுள்ள விண்ணப்பங்கள் 02.08.2021-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ கோவை பந்தயச் சாலையில் உள்ள இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலு வலத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மேலும் நேர் முகத்தேர்வு வரும் 03.08.2021-ஆம் தேதி காலை 10 மணிக்குக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெறும்  என அதில் தெரிவித்துள்ளார்.

;