districts

img

மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை

நாமக்கல், ஆக.7- மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என சிஐடியு மின் ஊழி யர் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத் துள்ளது. சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத் திய அமைப்பின் நாமக்கல் மின் பகிர் மான வட்ட கிளை 2 ஆவது மாநாடு ஞாயி றன்று நாமக்கல் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் கிளைத் தலைவர் கே.சின்னசாமி தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் கொடியினை நாமக் கல் கோட்ட செயலாளர் எஸ்.சௌந்தர ராஜன் ஏற்றி வைத்தார். திருச்செங் கோடு கோட்ட துணைத்தலைவர் பி. கண்ணன் வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உரை யாற்றினார். அறிக்கைகளை செயலா ளர் சு.கோவிந்தராசு, பொருளாளர் க. முருகேசன் முன்வைத்தார். இதில், விவ சாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலை வர் எஸ்.கந்தசாமி, ஓய்வுபெற்ற நில  அமைப்பின் மண்டல செயலாளர் எம். காளியப்பன் ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநில துணைத்தலைவர் கு.சிவ ராஜ் சிறப்புரையாற்றினார். இதில், மின்துறையை பொதுமக்க ளின் நலனுக்காக பொதுதுறையாக தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.

மின் சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும். மின்வாரியத்திலுள்ள 56  ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும். கேங்மேன் பணியாளர்க ளுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணி யிட மாறுதல், பயிற்சி காலத்தை குறைத் தல், பதவி பெயர் மாற்றம் வழங்க வேண் டும். கணக்கிட்டு பணியிடங்களை உடன டியாக நிரப்பி தரமான உபகரணங்கள் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர் களை அடையாளம் கண்டு, மின்வாரி யமே தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். 1.12.2019 முதல் வழங்க வேண் டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து மின் ஊழியர் மத் திய அமைப்பின் நாமக்கல் மின் பகிர் மான வட்ட கிளை தலைவராக ஏ.செளந்த ரராஜன், செயலாளராக எஸ்.கோவிந்த ராசு, பெருளாளராக கே.முருகேசன் மற் றும் துணை நிர்வாகிகள் உட்பட 16 பேர் கொண்ட வட்டக்கிளை தேர்வு செய்யப் பட்டது.

;