districts

img

டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்கும் அதிமுக திமுக வேட்பாளர் மலையரசன் குற்றச்சாட்டு

சேலம், ஏப்.12- அதிமுகவினர் டோக்கன் கொடுத்து வாக்குசேகரிக்க வரு வதாக கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையர சன் குற்றஞ்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் இந்தியா கூட் டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்ஒருபகுதியாக வெள்ளியன்று சேலம் மாவட்டத்தில் அயோத்தியாபட்டினம், பெரிய கவுண்டபுரம், காரிப்பட்டி, பெருமாள்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகு திகளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது  அவர் பேசுகையில், அதிமுகவினர் டோக்கன் வழங்கி உங்களி டம் வாக்கு சேகரிக்க வருவார்கள்; சட்டமன்ற தேர்தலி லேயே டோக்கன் மட்டும் தான் உங்களுக்கு கிடைத்தது; ஏமாந் துவிட்டீர்கள். மீண்டும் ஏமாற்ற வருவார்கள். ஏமாந்து விடா தீர்கள். ஒன்றிய பாஜக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்,  என்றார்.