districts

img

சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு

சேலம், மார்ச் 4- சேலம் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர் தல் வெள்ளியன்று மாநகராட்சி மன்ற வளா கத்தில் நடைபெற்றது. இதில், மாநக ராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமச்சந்திரன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததார். இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவித்தார்.  இதனைதொடர்ந்து ராமச்சந்திரனுக்கு மாநகராட்சி ஆணையாளர் சான்றிதழ் வழங்கி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற் றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ராமச்சந்தி ரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரி வித்தனர்.