districts

img

வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்: ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.20- சேலம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய  குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம்  மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கடந்த பிப்.18 ஆம்  தேதியன்று சீருடையில் இருந்த வழக்கறிஞர்கள் இரு வரை, கஞ்சா வழக்கு குற்றவாளிகள் தாக்கியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அஸ்தம் பட்டி காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளிக்க  சென்றபோது, அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அவதூ றாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரி வித்தும், வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி சேலம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் வியாழனன்று, அஸ்தம் பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங் கத்தின் தலைவர் இமயவர்மன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் முருகன், பொருளாளர் கண் ணன் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட னர்.