districts

img

அனைத்து தூய்மைப்பணியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்திடுக தமிழ்நாடு முதலமைச்சருக்கு முற்போக்கு அமைப்புகள் கோரிக்கை

கோவை,  ஜூன் 13 -  

தமிழ்நாடு அரசின் கீழ் ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் பணி புரியும் நிரந்திர தொழிலாளர்கள், பதிலி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், சுயஉதவி குழுக் கள் மற்றும் திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் அனைவ ரையும் முன்கள பணியாளர்களாக  அறிவிக்க வேண்டும் என முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு  செல்ல கோவை மாவட்ட ஆட்சி யரிடம் பல்வேறு முற்போக்கு அமைப்புகள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து திராவிடர் தமிழர்  கட்சியின் தலைவர் சி.வெண்மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை தலைவர் கே.ரத் தினகுமார், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி மலரவன், திவிக தலைவர் நேருதாஸ் உள்ளிட்ட அமைப்புகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,   கொரோனா நோய் தடுப்பு நடவ டிக்கைகளில் தாங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும், தியாக உள்ளத் தோடும் துணிச்சலான நடவடிக்கை களை எடுத்து தமிழ்நாட்டு மக்களை  காப்பாற்றும் தங்களின் நடவடிக் கைகளுக்கு நாங்கள் வலிமை சேர்க்க கடமைப்பட்டுள்ளோம். மேலும், சுனாமி, பெருவெள் ளம், பேரிடர் காலங்களில் தூய் மைப் பணியாளர்களின் பங்கு அளப் பறியது.  

தூய்மைப்பணியாளர்கள் மீதும் சமூகத்தின் மீதும் தாங்கள் மிகுந்த அக்கறை உடையவர் என் பதை அனைவரும் அறிந்ததே. கொரோனா நோய்த்தொற்று நட வடிக்கைகளில் ஈடுபடும் ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் பணி புரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தடுப்பு  நடவடிக்கையாக பிளிச்சிங் பவுடர்,  சுண்ணாம்பு தெளிப்பு மற்றும் கிருமி நாசினி தெளிப்பு ஆகிய பணிகளி லும் கழிவுகளை அகற்றுதல், சாக் கடை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரு கிறார்கள். நோய்த் தொற்று அறியப்பட்ட பகுதிகளில் தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறார்கள். நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பலரால் இழிவுக்கு உள்ளாக் கப்பட்டும் சில நேரங்களில் சிலரால் தாக்கப்பட்டும் அனைத்தை யும் கடந்து சமூக அக்கறையோடு தூய்மைப் பணியை செய்து வரு கிறார்கள். மேற்படி தொற்று தடுப்பு பணியை நேரடியாக செய்யும்  போது தூய்மை பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சிலர் இறக்கவும் நேரிட்டுள்ளது. நோய் தொற்று தடுப்பு நட வடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடு வது உயிருக்கு ஆபத்து விளை விக்கு என்றாலும் தூய்மை காவலர் கள் தொடர்ந்து நோய் தடுப்பு நடவ டிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேற்படி நோய் தடுப்பு நடவடிக் கைகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு  ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் நிரந் தர, ஒப்பந்த, தூய்மை காவலர் உள் ளிட்ட அனைத்து தூய்மை பணியா ளர்களையும் முன்கள பணியாளர் ்களாக அறிவிக்க வேண்டும் என வலி யுறுத்தி உள்ளனர்.

;