districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசு பேருந்துகள் ஜப்தி 

கோவை, செப்.20- சீருடைக்கு உண்டான தொகை வழங்காத தமிழக  போக்குவரத்து கழகத்தின் செயல்பாட்டிற்கு கண்டனம்  தெரிவித்து, அரசு பேருந்துகளை ஜப்தி செய்து நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்த சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.  தமிழ்நாடு அரசாங்கத்தின் போக்குவரத்துக் கழகம்  சார்பாக இயக்கப்படும் பேருந்துகளில் பணியாற்றும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கு உண்டான  பணம் தரப்படவில்லை. ஒப்பந்தத்தின் படி வருடத் திற்கு நான்கு ஜோடி சீருடைகளுக்கு உண்டான நிதி தர வேண்டும். இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் இந்த நிதி தரப்படாமல் இழுத்த டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை தொழி லாளர் நீதிமன்றத்தில் மோகன்ராஜ் என்ற நடத்துநர் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் ஆறு வருடத்திற்கு உண்டான 46 ஆயிரத்து 583 ரூபாய்  பணம் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த நிதி வழங்கப்படாததால் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருந்த, போக்குவ ரத்துக் கழகத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் பேருந்து ஜப்தி செய்யப்பட்டன.  பணிவரன் முறை செய்யப்பட்ட நிலுவைத் தொகை  2007 முதல் வழங்கப்படாத குறித்து, நடத்துநர் சக்திவேல்  என்பவர் முறையிட்ட வழக்கின் அடிப்படையில் ஒரு பேருந்து ஜப்தி செய்யப்பட்டன.  இரண்டு மாநகர பேருந் துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் நீதிமன்ற வளாகத்திற்குள் நிறுத்தி வைக் கப்பட்டன. இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

சாலை விரிவாக்க பணி: மக்கள் மகிழ்ச்சி

சேலம், செப்.20- சேலம் மின்னாம்பள்ளி சாலை விரிவாக்கம் செய்யப் பட உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் - ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மின் னாம்பள்ளியில் இருந்து செல்லியம்பாளையம் செல் லும் சாலை ஒரு வழித்தடமாக உள்ளது. இச்சாலையில் இரு வாகனங்கள் எதிரெதிரே வரும்போது ஒதுங்குவ தற்கு கூட வழியில்லை. பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் நேரங்களில் குறுகிய சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இச்சா லையை அகலப்படுத்துமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, வாழப் பாடி நெடுஞ்சாலைத் துறையினர், இச்சாலையை அகலப் படுத்த ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம் பாடு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு பெற்று, சாலை விரி வாக்கப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். தற்போது, சாலை அகலப்படுத்தும் பணி களுக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களைக் கணக் கெடுத்தல் மற்றும் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்காக, நில அளவையரைக் கொண்டு  சாலையின் எல்லைகளை வரையறை செய்யும் பணிக ளில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்ற னர். விரைவில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிட்கோ பின்னலாடை ஆய்வு

திருப்பூர், செப்.20- முதலிபாளையத்திலுள்ள பின்னலாடை தொழிற் பேட்டையில், தாட்கோ தலைவர் வெள்ளியன்று ஆய்வு  செய்தார். திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் பகுதியில் சிட்கோ பின்னலாடை தொழிற்பேட்டையில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வெள்ளி யன்று, தாட்கோ தலைவர் உ.மதிவாணன் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், தாட்கோ தலை வர் உ.மதிவாணன் தெரிவித்ததாவது, திருப்பூர் முதலி பாளையத்தில் தாட்கோ வழியே கட்டப்பட்டுள்ள 88 தாட்கோ பின்னலாடை தொழில்பேட்டையினை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிதில மடைந்துள்ள பின்னலாடை தொழில்பேட்டையினை மறுசீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்வில், தாட்கோ மாவட்ட மேலாளர் த.இரஞ்சித்குமார் மற்றும்  செயற்பொறியாளர் சரஸ்வதி மற்றும் துறைசாரந்த அலு வலர்கள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு - கேரள மாநில போலீசார் இடையே  எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம்

கோவை, செப்.20- கோவை மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் கார்த்தகேயன் மற்றும் கேரளா காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்கா ணிப்பாளர் அஸ்வதி ஜுஜி, பாலக்காடு கலால் துறை ஆணையர் ராகேஷ் உள்ளிட்ட அதி காரிகள் கலந்து கொண்டனர். இதில், மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் பற்றிய முன் கூட்டியே உளவுத் துறைகள் தகவல் கள் சேகரித்தல் மற்றும் பரிமாறிக்கொள்ளு தல், லாட்டரி, பாலியல் தொழில், போலி மது, கஞ்சா, கனிமங்கள், மணல், மதிப்புமிக்க பொருட்கள் கடத்தல், போன்ற சட்ட விரோத செயல்களின் நடவடிக்கைகள் பற்றிய தக வல்களை சேகரித்தல் பற்றியும், எல்லை  சோதனைச் சாவடிகள் மூலம் எல்லை தாண் டிய குற்ற செயல்களை கட்டுப்படுத்துதல் பற்றியும், இரு மாநிலங்களுக்கு இடையே யான குற்றங்களை கட்டுப்படுத்த இரு  மாநிலங்களின் தனிப் படைகளை ஒருங்கி ணைப்பது பற்றியும், எல்லைப் பகுதியில் நடைபெறும் குற்றங்களில் தடுக்க எடுக்கப் படும் நடவடிக்கைகள் பற்றியும், எல்லை தாண்டியுள்ள என்பிடபிள்யு (non bailable  warrant - NBW) கைதிகளை கைது செய்தல்  பற்றியும், முக்கிய பிரமுகர்களின் வழிப்  பாதுகாப்பு பற்றியும், இரு மாநிலங்களுக்கு  இடையேயான சட்ட விரோத போக்குவரத்து, மருத்துவக் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகளை கொட்டுவதைத் தடுத்தல் பற்றி யும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்ப தில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங் கிணைப்பு பற்றியும் இக்கலந்தாய்வு கூட்டத் தில் ஆலோசிக்கப்பட்டது.

தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்!

நாமக்கல், செப்.20- திருச்செங்கோடு அருகே தெப்பக் குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தெப்பக் குளம் உள்ளது. பருவ நிலை மாறுபாட்டால், திடீரென ஏற்பட்ட வெப்பத்தால் தண்ணீர் சூடானதை தொடர்ந்தும், மற்றும் விநாயகர் சதுர்த் தியை ஒட்டி சிறு சிலை குளத்திலேயே  கரைத்ததாலும், குளத்தில் உள்ள மீன் கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளது.  மேலும் குளத்தைச் சுற்றி பாதுகாப்பு இல்லாததால், குளத்தைச் சுற்றி பாது காப்பு வேலி இருந்தும் கதவு கொண்டு அடைக்கப்படவில்லை. இதனால், தண் ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளது. குளத்தை பயன்ப டுத்த வருபவர்கள் சாமி நீராட்டு, கம்பம் விடுதல், காரியங்கள் செய்ய வருபவர் கள் என பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மட்டும் திறந்து விடும் வகையில் கதவு அமைக்க வேண்டுமென சமூக ஆர்வ லர்கள் தெரிவிக்கின்றனர். முன்ன தாக மீன்கள் செத்துமிதப்பதால், துர்நாற்றம் வீசுவதாக வியழப்னன்று பொதுமக்களிடம் இருந்துவந்த புகாரை அடுத்து, திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு சம்பவ இடத்தை பார்வையிட்டு தெப்பக் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், நகர்மன்ற உறுப்பி னர்கள், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

90 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

சேலம், செப்.20- ஆத்தூர் நகராட்சிக்கு 90 லட்சம் லிட் டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட  ஆட்சியரிடம் நகர்மன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி  33 வார்டுகளைக் கொண்டது. ஆத்தூர் கோட்டை, முல்லைவாடி, புதுப்பேட்டை, கடைவீதி மற்றும் காந்தி நகர் ஆகிய இடங்களில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அங் குள்ள பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது. ஆத்தூர் - மேட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கல்லாநத்தம் முட்டல் ஏரியில் உள்ள கிணறு, அய்யனார் கோவில் ஏரியில் உள்ள கிணறு என  குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஆத்தூர் நகராட் சிக்கு என ஆத்தூர் - மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, குடி நீர் விநியோகம் செய்ய வேண்டும் என  அரசு உத்தரவிட்டது. ஆனால், தற் போது இத்தனை இடங்களில் இருந்து  குடிநீர் பெறப்பட்டும், 15 நாட்களுக்கு  ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக் கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வரு கின்றனர். மேட்டூரில் தற்போது 100  அடிக்கு தண்ணீர் இருந்தும் ஆத்தூர்  பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வில்லை. வாரம் ஒரு முறையாவது குடி நீர் விநியோகம் செய்ய வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். எனவே, நகராட்சிக்கு செய்த  ஒப்பந்தப்படி 90 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவியிடம், ஆத்தூர் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜீவா ஸ்டாலின், மீனாட்சி வேலுமணி, பிரபு ஆகியோர் மனு அளித்தனர்.

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 57 மசாஜ் சென்டர்களுக்கு பூட்டு

கோவை, செப்.20- கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 57 மசாஜ் சென்டர் கள் மூடப்பட்டுளளதாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுக ளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்து பாலியல் வணிக தொழிலில் ஈடுபடுத்த பெண்களை அழைத்து வந்த சம்பவம் கோவையில் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதுதொடர் பாக சிக்கந்தர் பாஷா, அவருடைய கூட்டாளி ஸ்டீபன் ராஜ் ஆகியோரை கோவை மாநகர காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். அவர்க ளிடம் நடந்த விசாரணையில் பல் வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தது. இவரிடம் மாமூல் பெற்ற நபர் கள் தொடர்பில் இருந்த நபர்கள் வாட்ஸ் அப் மூலமாக போட்டோ அனுப்பி இளம் பெண்களுடன் ஹோட்டலில் தங்கிய பிரபலங்கள் குறித்து விசாரணை நடக்கிறது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் ஸ்டாலின் கூறுகையில், பாலியல் வணிகத்திற்காக கும்பலை வழி  நடத்திய சிக்கந்தர் பாஷா, அவரின் கூட்டாளி கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர். சிக்கந்தர் பாஷாவிடம் 16 செல்போன்கள் இருந் தன. அந்த செல்போன்களை அவரது  கூட்டாளிகள் சிலர் பயன்படுத்துவ தாக தெரிகிறது. காவல் துறைக்கு  பயந்து அவர்கள் தலைமறைவாகி யுள்ளனர். பெங்களூரு, மும்பை, ஹைத ராபாத் உள்ளட்பட பல்வேறு நகரங்க ளில் இருந்து அவர்கள் வாடிக்கை யாளர்களுக்கு பெண்களின் விவரங் களை அனுப்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கும்பலைச்  சேர்ந்தவர்கள் கோவை நகருக்குள்  வருவதில்லை. ஆனால் வெளிமாநி லத்தில் தங்கி விவரங்களை அனுப்பி ஆன்லைன் மூலம் பணம் வாங்கி இளம் பெண்களை ஓட்டலுக்கு அனுப்பி பாலியல் தொழில் செய்கின்றனர். இந்த கும்பல் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டல்களை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கும்பலில் 4 முதல் 6 பேர் இருக் கலாம். இவர்களை பிடிக்க காவல் துறை தீவிரம் காட்டி வருகின்றனர். நகரில் மசாஜ் சென்டர், ஸ்பா போன்ற வற்றில் இதுபோன்ற பாலியல் வணி கம் செய்வதை தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு உள்ளனர். மேலும் இதனை  தடுக்க தேவையான முயற்சிகள் எடுக் கப்பட்டு உள்ளது. சட்ட விரோதமாக நகரில் செயல்பட்ட 57 மசாஜ் சென்டர் கள் இதுவரை மூடப்பட்டுள்ளன, என்றார்.

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடி கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை, செப்.20- பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் அரசு அலுவலர் களை மிரட்டி பணம் பறிப்பது, பொது வெளியில் உள்ள நிறு வனங்களை மிரட்டுவது  உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடு வோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை  ஆட்சியர் கிராந்திகுமார் பாடி எச்சரித்துள்ளார். இதுகுறித்து வெள்ளியன்று ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஜனநாயகத்தைக் பேணிக் காப்பதில் ஊடகம் மற்றும் தொலைக்காட்சிகள் முக்கி யப் பங்காற்றுகின்றன.  இந்நிலையில், கோவை மாவட்டத் தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் அரசு அதி காரிகளை மிரட்டுவதும், அவர்களை பற்றி அவதுாறு செய்தி களை வெளியீடு செய்கின்றனர். மேலும் தங்களுக்கு உயர்  அதிகாரிகளை நன்கு தெரியும் என்றும், அவர்களிடம் சொல்லி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுக்கிறேன் என்று மனுக்களை பெற்றுக்கொள்கின்றனர். அதோடு ஏமாற்று வார்த்தைகளை சொல்லி பணத்தையும் பறித்துக்கொள்வ தாக ஏராளமான புகார்கள் வருகின்றன. அதோடு அரசு அலு வலர்களை மிரட்டுதல், காவல் நிலையங்களில் சமரசம் என்ற  பெயரில் கட்டபஞ்சாயத்து புகார்கள் வருகின்றன.  மேலும், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவல கங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு  சிலர் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.  போலி பத்திரிகையாளர்களின் புறம்பான செயலுக்கு அரசு  அதிகாரிகள் துணை போகக்கூடாது. மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக 9498042423 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு  தகுந்த ஆதாரத்துடன் குறுந் தகவல்களை அனுப்பினால், அந்த நபர்கள் மீது தக்க நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

மூதாட்டி பாலியல் வன்கொலை: பேரன் கைது

சேலம், செப்.20- எடப்பாடி அருகே 75 வயதான மூதாட்டியை, பாலியல் வன் கொலை செய்த பேரனை காவல் துறையினர் கைது செய்த னர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி, தனது கணவர் இறந்த நிலை யில் தனியாக வசித்து வந்தார். இவருக்க 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். விவசாயக்கூலி வேலை செய்து வந்த மூதாட்டி, வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வியாழனன்று இரவு உறங்க சென்றார். இந்நிலையில், வெள்ளியன்று காலை வீட்டு முன் அறையில் ரத்த காயங்களுடன் மூதாட்டி பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தி னர் இது குறித்து எடப்பாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணை யில், மூதாட்டியின் மகளின் மகன் விக்னேஷ் (22) குடிபோதை யில், அவரது வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து விக்னேஷை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மது போதையில் இருந்த விக்னேஷ் தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றதும், அங்கு அவரை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், மூதாட்டி சத்தம் போடவே அவரை தாக்கிய தால், பலத்த காயமடைந்து உயிரிழந்ததையும் விக்னேஷ் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தொடர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். 75 வயதான பாட்டியை பேரனே பாலியல் வன்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஓடை ஆக்கிரமிப்பு
சேலம், செப்.20- சேலம் மாமாங்கம் பகுதியில் இயங்கிவரும் எஸ்ஆர்சிஎல் நிறுவன அதிகாரிகள் ஓடையை ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.  சேலம், மாமாங்கம் கீழ் போர்டு ஓடையில் இருந்து வழிந்து ஓடும் தண்ணீர் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழி யாக அருகாமையில் உள்ள ஜாகீர் பெரிய மோட்டூர், ஜாகிர் ரெட்டிபட்டி, சூரமங்கலம் பகுதிகளில்  உள்ள  ஏரிகளுக்கு சென்றடைகிறது. அரசு புறம்போக்கு நிலத்தில் சுற்றுச்சுவர் அமைத்ததோடு ஓடை தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஆக்கிரமிப்பும்  செய்யப்பட்டுள்ளது.  தற்போது அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியும் மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. ஓடை ஆக்கிரமிப்பை அகற்றினால் தான் நெடுஞ்சாலைப் பணியில் தொய்வு ஏற்படாது. ஓடையில் இருந்து செல்லும் தண்ணீர் தங்கு தடை இன்றி ஏரிகளுக்கு செல்ல ஆக்கிரமிப்பு அகற்றி தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள மக்கள், புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால் பக்தர்கள் தடையின்றி ராமர் பாதம் கோயிலுக்கு சென்று வழிபட வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எஸ் ஆர் சி எல் நிறுவனம் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றா விட்டால் சுற்று வட்டார பகுதி மக்கள் மாபெரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.

ஆணைகள்படி ஊதியம் வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, செப்.20- தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் செயல் முறை ஆணைகள்படி ஊதியம் வழங்க வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சி பொது சுகா தாரப் பிரிவில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த முறையினர் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெருந்துறை, கெம்பநாய்க்கன்பாளையம், பெரியகொடி வேரி மற்றும் அரியப்பம்பாளையம் உள்ளிட்ட சில பேரூராட்சி கள் நீண்டகாலமாக பிற பேரூராட்சிகளில் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. எனவே, இத்தொழிலாளர்க ளுக்கு தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச கூலி சட்ட அரசாணை ஊதியம் வழங்க வேண்டும்; அல்லது முதன்மை செயலா ளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணைகள்படி ஊதியம் வழங்க வேண்டும். அதேபோல ஓட்டுநர்கள் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் என்ற தகுதியுடனே பணியில் சேர்ந்தனர். அவர்கள் திறன் பெற்றவர்கள் பட்டியலில் வைக் கப்பட வேண்டும். அதற்குரிய ஊதியம் வழங்க வேண்டும். மேலும் டிபிசி பணியாளர்கள், குடிநீர் விநியோகிப்பாளர்க ளுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அனைத்துவகை பணி யாளர்களுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ திட்டங்கள் அமல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி, சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர் சங்கத்தினர், பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநரிடம் மனு அளித்தனர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட வேண்டுகோள்

நாமக்கல், செப்.20-  பள்ளிபாளையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட தொழிலதி பர்களுக்கு நகர மன்ற தலைவர் வெள்ளி யன்று பள்ளிபாளையம் நகராட்சி அலு வலகத்தில் வேண்டுகோள் விடுத்துள் ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம் நமக்கு நாமே திட்டம் 2024-2025 இன் கீழ்  பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி மேம்பாட்டு பணி கள் நடைபெற்று வருகிறது. இப்பணிக ளுக்காக பிஎஸ்கே டெக்ஸ்டைல்ஸ், பொன்னுசாமி டெக்ஸ்டைல் உள்ளிட்ட டெக்ஸைட்டல் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்பாக  ரூபாய்  பத்து லட்சம் ரூபாய் கான வரைவு ஓலையை பள்ளிபாளையம்  நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பால முருகன், முன்னிலையில், நகராட்சி ஆணையாளர் தாமரையிடம் வழங்கி னார்கள். இதுகுறித்து நகரமன்ற தலைவர், துணை தலைவர் கூறும் பொழுது பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிலதிபர்கள், தன்னார்வ லர்கள் பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம் நகராட்சி வளம் பெற உதவிடுமாறு  வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்வின்போது நகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சார் பதிவாளர் அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை, செப். 20- கோவை வெள்ளளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், வியாழனன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கோவை, வெள்ளலூரில் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் சார் பதி வாளராக நான்சி நித்யா கரோலின் பணி புரிந்து வரு கிறார். பத்திரப் பதிவிற்காக சிங்காநல்லூர் சார் பதி வாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொழில் அமைப்பினரிடம் பத்திர எழுத்தர்கள் மூலம் லஞ்சம் வசூலித்து வருவதாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறை யினருக்கு புகார் கிடைத்தது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பரிமளா தலைமையிலான போலீசார் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் வாயில் கதவுகளை பூட்டிய போலீசார் அலுவலக வளாகத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் கீர்த்தி என்பவரிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்!

சேலம், செப்.20- மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரி வில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் ப்படும். இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததால், வியா ழக்கிழமை இரவு முதல் மீண்டும் இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கியது.