districts

img

க்ளோனிங் மர நாற்று முறை – அசத்தும் கிராம ஊராட்சி

மேட்டுப்பாளையம், ஜன.23- க்ளோனிங் மர நாற்று முறை போன்றவற்றின் மூலம் மண் சார்ந்த மரங்களை மீட்டெடுத்து மாசில்லா ஊரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மேட் டுப்பாளையத்தை அடுத்துள்ள ஒரு சிறு கிராம ஊராட்சி.

கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள சிக்காரம் பாளையம் என்ற ஊராட்சியில் அந்த கிராமத்திற்கே உரிய மண் சார்ந்த நாட்டு மரங்கள் உள்பட  இரண்டு லட்சம் மர நாற்றுக்களை ஒரு பண்ணைத்தோட்டம் அமைத்து தயார் செய்து வரு கிறது கிராம நிர்வாகம். தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட் டத்தின் கீழ் இருபது கிராமப்புற பெண்கள் மர நாற்று உற்பத்தி பணியில் தீவிரமாக பணியாற்ற ஒரு தொழிற்கூடம் போல் மும் மரமாக இயங்கி வருகிறது

இந்த பண்ணை. இங்கு ஆல், அரசு, வேப்பம், சந்தனம், புளி, பனை,  மா, பலா, காரை, புங்கை என  இருபத்தியேழு வகை மரங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு இரண்டு லட்சம் மரக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில் தற்போது அறு பதாயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. பத்தாயிரம் பனை விதைகள் சாக்குகளில் அதற்கான மண் ஆதாரத்தோடு வைத்து முளைப்பு திறன் அதிகரிக்க பராமரிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் ஏற்கனவே நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரு கின்றன.  தரிசு நிலத்தில் வளர்க்க வேண் டிய மரங்கள், நீர்நிலைகளின் ஓரங்களில் வளர்க்க வேண்டிய மரங்கள், விவசாய வரப்புகளில் வளர்க்கும் மரங்கள், சாலை யோரம் வளர்க்க வேண்டிய மரங் கள், வீடுகளில் வளர்க்க வேண் டிய பழ மரங்கள் என தரம் பிரித்து  நாற்றுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

 மேலும் வாய்ப்புள்ள இடங்களில் அடர் வனம் உருவாக் குவதோடு, நாட்டிலேயே முதல் முறையாக ஊராட்சியில் க்ளோ னிங் சென்டர் மற்றும் ஆக்சிஜன் ஹப் அமைக்கவும் பணிகள் நடை பெற்று வருகிறது.  கிராம ஊராட்சியின் இந்த சீரிய முயற்சியை அறிந்த தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தங்களது வேளாண் வல்லுநர்கள் மூலம் பாரம்பரிய மரங்களை மீட்டெ டுக்க க்ளோனிங் மர நாற்று முறை,  விதைகள் மற்றும் மண் தேர்வு என  பல்வேறு உதவிகளை செய்து வரு கிறது.  

மேலும் மர நாற்று உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள பெண் களுக்கு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஐந்து நாள் இலவச பயிற்சியும் அளித்து திட்டத்தை முறைப்படுத்தி வருகிறது. இதனால் தங்களது ஊராட்சியை நாட்டிலேயே அதிக மரங்கள் உள்ள பசுமையான மாசில்லா கிராம ஊராட்சி என்ற இலக்கை நோக்கி சிக்காரம்பாளையம் ஊராட்சி வேகமாக பயணித்து வருகிறது.

 “ஊராட்சி என்றால் சாக்கடை,  தெருவிளக்கு, குடிநீர் விநியோகம் போன்றவற்றை கவனித்தல் என்று மட்டுமில்லாமல் சமூக அக் கறையோடு சுற்றுச்சூழல் சுகா தாரத்தை பேணி காக்கவும் வழியுண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு முன்னோடி  ஊராட்சியாக சிக்காரம்பாளை யம் ஊராட்சியை மாற்றவே முயன்று வருகிறோம் எனக்கூறும் இதன் தலைவர் ஞானசேகரன்,

ஒரு மனிதன் தான் உயிர் வாழ பயன்படுத்திய காற்றையும் நீரை யும் திரும்ப இவ்வுலகிற்கு விட்டு  செல்வது அவசியம் என கருது கிறேன். இதற்கு சுலபமான ஒரே வழி ஒவ்வொருவரும் ஒரு மரத்தி னையாவது வளர்த்து பேணி காக்க வேண்டும்” என்கிறார்.  

இன்றைய காலகட்டத்தில் இது போன்ற முயற்சிகளை மேலும் ஊக்குவித்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என மண் சார்ந்த மர வளர்ப்பு திட் டத்தை பரவலாக்க மத்திய, மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது. காட் டழிப்பை தடுக்க வேண்டும்,

தற் போதுள்ள குறைந்த எண்ணிக்கை யிலான மரங்களையாவது காப் பாற்ற வேண்டும், இட வசதியும், மண் வளமும் மிகுந்த கிராமப் புறங்களில் மண்ணுகேற்ற மரங்களை நட்டு வளர்க்க வேண் டும், வேளாண் காடுகள் வளர்ப்பு  திட்டங்களை ஊக்குவிக்க வேண் டும், இதுவே நம்மை காற்று  மாசில் இருந்து நம்மை மட்டு மின்றி வரும் தலைமுறையின ரையும் காக்கும். -இரா.சரவணபாபு.

;