districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பெண்ணிடம் அத்துமீறல்: காவலர் கைது

பெண்ணிடம் அத்துமீறல்: காவலர் கைது சேலம், டிச.29- சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வருபவர் கலையர சன் (35). இவர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு சுமார் 11 மணியளவில் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த பெண்ணிடம் தக ராறு செய்ததுடன், அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார். இத னால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிடவே, அங்கி ருந்த பொதுமக்கள் கலையரசனை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது தான் ஒரு காவலர் என அவர் கூறி யுள்ளார். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசாரை வரவ ழைத்து அவர்களிடம் கலையரசனை ஒப்படைத்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், கலைய ரசன் மதுபோதையில் இருந்தது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து கலையரசன் மீது பெண்கள் மீதான வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பள்ளப் பட்டி போலீசார், அவரைக் கைது செய்து நீதிபதி முன்பு  நேர்நிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க ஆட்சியர் உத்தரவு

மழையால் சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க ஆட்சியர் உத்தரவு நாமக்கல், டிச.29- மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், என நாமக்கல் ஆட்சியர் ச.உமா உத்தர விட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மணலி ஜேடர்பாளையத்தில் கனமழையின் காரணமாக வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. அப்பகுதி யில் மாவட்ட ஆட்சியர் ச.உமா அண்மையில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விரி வாக ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களிடம் கேட்டறிந் தார். அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட பெரிய மணலி ஊராட்சி, ஜேடர்பாளையம் சேர்வம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஜேடர்பாளையம் தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட் டது. இந்நிலையில், பெரியமணலி ஊராட்சி கனிமங் கள் மற்றும் சிறுகனிமங்கள் நிதியிலிருந்து, ஜேடர்பா ளையம் முதல் சேர்வம்பட்டி சாலை வரையிலான தார்சாலையை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க வும், ஜேடர்பாளையம் தொடக்கப்பள்ளியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் ச.உமா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் 172 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

நாமக்கல், டிச.29- நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 172 குழந்தை திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக் கல்லை குழந்தைத் திருமணம் இல் லாத மாவட்டமாக உருவாக்கிடும் முயற்சியில், சமூக நலத்துறை, காவல் துறை, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, மகளிர்  திட்டம், மாவட்ட மனநல திட்டம் ஆகியவை ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் வட்டாரங்கள், ஊராட்சிகள், கிராமங்கள் கண்டறி யப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றின் பயனாக கடந்த 2022 ஆம் ஆண்டில் 165, 2023 ஆம் ஆண் டில் 117, 2024 ஆம் ஆண்டில் 74 என்ற வகையில் குழந்தைத் திருமணங் கள் குறைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங் கள் குறித்து 2022 ஆம் ஆண்டில்  230 புகார்கள் பெறப்பட்டு, 65 திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளன. 165 புகார்கள் காவல் நிலை யத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் 171 புகார்கள் பெறப்பட்டு 54 திருமணங்கள் நிறுத் தப்பட்டுள்ளன. மேலும், 114 புகார் கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை 127 புகார்கள் பெறப்பட்டு, 53 திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன. இதில் 54 புகார்கள் காவல் நிலையத்தில் பதிவு செய் யப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 528 புகார் கள் பெறப்பட்டு, 172 குழந்தை திரு மணங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 333 புகார் களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத் தில் குழந்தை திருமணம், இளம் வயது கருவுற்றல் நடைபெறாத மாவட்டமாக உருவாக்க குழந்தை கள் நலன் சாா்ந்த அனைத்து துறை களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களும் தங் கள் பகுதிகளில் குழந்தை திரு மணம் நடப்பதாக தெரிந்தால் உட னடியாக இலவச குழந்தைகள் தொலைபேசி எண்ணான 1098 என்ற  எண்ணிற்கு தொடா்பு கொண்டு தக வல் தெரிவிக்க வேண்டும். குழந் தைத் திருமண தடைச் சட்டம்  2006-இன்படி, 18 வயது நிறைவடை யாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆண் குழந் தைக்கோ திருமணம் செய்வது குற் றமாகும். மீறுவோர் மீது குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006-இன் படி, 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆசிரி யைகள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு குழந்தை திரும ணம் நடைபெறுவது தெரியவந் தாலோ, மாணவிகள் தங்களுடன் பயிலும் தோழிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற நடவடிக்கை கள் ஏதும் மேற்கொள்ளப்படுவது குறித்து தெரியவந்தாலோ உடனடி யாக தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இணையதளம் மூலம் மோசடி: 2 பேர் கைது

உதகை, டிச.29- இணையதளம் மூலம் முன்னாள் ராணுவ வீரரிடம் இருந்து ரூ.45 லட்சம் பணமோசடி செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் கடந்த ஆக.3 ஆம் தேதி யன்று வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த முன் னாள் ராணுவ வீரர், தனது சேமிப்பு பணம் ரூ.45 லட்சத்தை போலியான இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்தது தொடர்பாக புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, புகார்தாரரின் வங்கி பரிவர்த்தனை அறிக் கையை பெற்று, பணம் முதலீடு செய்த வங்கி எண்ணை கண்டுபிடித்து, அந்த வங்கி எண் ணிற்கான உரிமைதாரரை பற்றிய விவரங் களை சேகரித்தனர். சம்மந்தப்பட்ட வங்கி  கணக்கு மேற்கு வங்க மாநிலம், ஹவுரா  என்ற பகுதியைச் சேர்ந்த ஞஷைலேஸ் குப்தா (56), ருஸ்தம்அலி (37) ஆகியோரு டையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா அறிவுரையின்படி, கூடுதல் காவல்கண்காணிப்பாளர் செளந்திரராஜன் மேற்பார்வையில் சைபர் குற்ற காவல்  நிலைய ஆய்வாளர் பிரவீனா தலைமை யிலான தனிப்படையினர் மேற்கு வங்க மாநிலம், சென்று மேற்படி நபர்களை டிச.23 ஆம் தேதியன்று கைது செய்தனர். தொடர்ந்து, டிச.27 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கூறுகை யில், பொதுமக்கள் இதுபோன்று போலியாக இருக்கும் இணையதளங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளில் ஏதேனும் வங்கி மற்றும் தங்களுடைய சுய  விவரங்களை பகிர வேண்டாம். மேலும், இது போன்று அழைப்புகள் வரும் பட்சத்தில் சைபர் குற்ற கட்டணமில்லா உதவி எண் 1930யை தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்க வேண்டும், என்றார்.

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சேலம், டிச.29- தொடர் விடுமுறையால் சுற்றுலாத் தலமான ஏற்காட்டில்  சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு உள்ளது. இங்கு சேலம் மாவட்டம், மட்டுமல்லாது கேரளம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்று லாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந் நிலையில், அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் ஞாயிறன்று ஏற்காட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணி கள் வந்திருந்தனர். இதனால் ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், சூழல் சுற்றுலா பூங்கா போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய வந்த சுற்றுலாப் பயணிகள் பயணச்சீட்டு வாங்கி கொண்டு வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஆய்வு

சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஆய்வு சேலம், டிச.29- சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் வெள்ளியன்று வரு டாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையில் அனைத்து காவல் நிலை யங்களிலும் துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறை துணைத்தலைவர், உள்ளிட்ட உயரதிகாரிகள், வருடாந்திர ஆய்வு பணியை  மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், 2024 ஆண்டின்  இறுதியான தற்போது, இத்தகைய ஆய்வுப்பணி தொடர்ந்து  நடத்தப்படுகிறது. இதில், சேலம் ரயில்வே காவல் நிலை யத்தில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பெரிய சாமி வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசாரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டார். இதன் பின் காவல் நிலையத்திலுள்ள துப்பாக்கி உள்ளிட்ட ஆயு தங்கள் மற்றும் வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய் தார். தொடர்ந்து, காவலர்களின் பதிவேடுகள், குற்ற வழக்கு கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார்.

101 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
101 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் உதகை, டிச.29- கோத்தகிரியில் 101 கிலோ தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலமான கர்நாடக  பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகை யிலைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  ஞாயிறன்று கோத்தகிரி காவல் துறையினர் ராம்சந்த் பகுதி யில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை  மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த பிக்கப் வாக னத்தில் 101 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகை யிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய காவல் துறையினர் அந்த வாகனத்தில் வந்த  மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த யாக்கியாவுதீன் மற்றும்  கோத்தகிரி, ஒரசோலை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகி யோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில் மைசூரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக கோத்த கிரி வந்ததாகவும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைக ளுக்கு விற்பனை செய்ய இந்த புகையிலைப் பொருட் களை கொண்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மளிகைக் கடையில் பணம் திருட்டு
மளிகைக் கடையில் பணம் திருட்டு உடுமலை, டிச.29- உடுமலையிலுள்ள மளிகைக் கடை ஒன்றில் ரூ.3.5 லட்சம்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகரின் முக்கிய  பகுதியான பழனி சாலையிலுள்ள வணிக வளாகத்தில்  செல்வகணேஷ் என்ற மளிகை கடை செயல்பட்டு வருகிறது.  இக்கடையின் பின்புறம் உடுமலை வாரச்சந்தை இயங்கி வரு கிறது. இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை சந்தையின் வழி யாக இக்கடைக்கு பின்புறம் வந்த அடையாளம் தெரியாத நபர் கள், மேற்கூரையை உடைத்து கடைக்குள் நுழைந்து கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.3.5 லட்சம் மற்றும் கண்காணிப்பு  கேமரா ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.  இச்சம்பவம் குறித்து உடுமலை காவல் துறையினர் வழக்குப்ப திவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடு மலை நகரில் அடிக்கடி இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள்  நடைபெற்று வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ள னர்.

பழமை வாய்ந்த ரயிலுக்கு கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள் 

கோவை, டிச.29- 21 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த கோவை மயிலாடு துறை ஜன் சதாப்தி விரைவு ரயிலுக்கு கேக் வெட்டி பயணிகள்  கொண்டாடினர். கோவை முதல் மயிலாடுதுறை வரை செல்லும் ஜன்  சதாப்தி விரைவு ரயில் வாரம் ஆறு நாட்கள் செயல்படுகிறது. கோவையில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் இந்த  ரயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பய ணித்து வருகின்றனர். காலை 7:15 மணி அளவில் புறப்ப டும் இந்த ரயிலானது மதியத்திற்குள் மயிலாடுதுறை சென் றடைகிறது. மறு மார்க்கமாக மாலை மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 9:30 மணி அளவில்  கோவை வந்தடைகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங் கிய இந்த ரயில் சேவையானது 21 ஆண்டுகாலம் நிறைவடை வதை முன்னிட்டு பயணிகளின் வசதிகளை பூர்த்தி செய்யும்  விதமாக புதுப்பொலிவுடன் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப் பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை சனியன்று கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி மகிழ்ந்த னர். இந்த எல்எச்பி பெட்டிகள் என்பது அதிக இடமும், நிலைத் தன்மையும் கொண்டது என்பதும் அதிக திறன் மற்றும் எலக்ட் ரானிக் கட்டுப்பாடுகளையும் வேகத்திற்காகவும் வடிவமைக் கப்பட்ட பெட்டிகள் ஆகும்.

சோதனைச்சாவடியில் மோதல்: மதுவிலக்கு போலீசார் பணியிடை நீக்கம்

சேலம், டிச.29- மேட்டூர் சோதனைச்சாவடியில் சுற்றுலா பேருந்து ஓட்டுநருடன் மோதல் ஏற்பட்ட விவகாரத்தில், மதுவிலக்கு பிரிவு காவலர்கள் 3  பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர் காரைக்காட்டில் தமிழக – கர்நாடக  எல்லையில், மாவட்ட போலீசாரின்  சோதனைச்சாவடி உள்ளது. இவ் வழியாக வெளி மாநில மது வகை கள், கஞ்சா, புகையிலை பொருட் கள் உள்ளிட்ட போதைப் பொருட் கள் கடத்தி வருவதை தடுக்க மேட் டூர் மதுவிலக்கு போலீசார், 24  மணி நேர கண்காணிப்பில் இருந்து  வாகனங்களில் சோதனையை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், கடந்த வெள்ளியன்று அவ் வழியே கர்நாடக மாநிலம், மாதேஸ் வரன்மலைக்கு சென்ற சுற்று லாப் பேருந்தை மதுவிலக்கு காவ லர்கள் (ஏட்டுகள்) செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்வரன் ஆகி யோர் சோதனையிட்டனர். அப் பேருந்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்மீக சுற்றுலாப் பயணி கள் இருந்தனர். ஓட்டுநர் சிவநாரா யணன் (52), உதவியளாளர் அஜய்  (20) ஆகியோர் தங்கள் வண்டியில் ஒன்றுமில்லை எனக்கூறி, காவலர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். ஒருகட்டத்தில் இருதரப்பின ருக்கும் இடையே மோதல் ஏற்பட் டது. அதில், ஓட்டுநர், உதவியாளர் இருவரும் சேர்ந்து காவலர்களை இரும்பு பைப்பால் தாக்கினர். பதி லுக்கு காவலர்களும் தாக்குதல் நடத்தினர். இதகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த மேட்டூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், கொளத்தூர்  காவல் ஆய்வாளர் தொல்காப்பி யன் தலைமையிலான போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட சுற்றுலா  பேருந்து ஓட்டுநர் சிவநாராயணன், உதவியாளர் அஜய் ஆகியோரை  பிடித்தனர். காவலர் செந்தில்குமா ரின் புகாரின்பேரில், இருவர் மீதும்  வழக்குப்பதிந்து கைது செய்தனர்.  பிறகு அவர்களை ஜாமீனில் விடு வித்தனர். உடனே அவர்கள், சுற் றுலா பேருந்தை எடுத்துக் கொண்டு கர்நாடகா சென்றனர். இத னிடையே ஓட்டுநர் சிவநாரா யணன், போலீஸ் ஏட்டுகள் மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அந்த புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இம்மோதல் விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கௌதம் கோயல் நேரடி விசாரணை நடத்தினார். அதில், சோதனைச்சாவடியை கடந்த பேருந்து ஓட்டுநரிடம் ஓட்டு நர் உரிமம், பர்மிட் உள்ளிட்டவை களை கேட்டுள்ளனர். சரியான பதில் வராததால், வாக்குவாதம் ஏற் பட்டு மோதலாகியது தெரியவந் தது. இதையடுத்து சிவநாராயணன்  புகாரின் பேரிலும் வழக்கு நடவ டிக்கை எடுக்க கௌதம் கோயல் உத்தரவிட்டார். அதன்பேரில் கொளத்தூர் காவல் துறையினர், காவலர்கள் செந்தில்குமார், முத்த ரசு, சுகவனேஸ்வரன் ஆகியோர் மீது ஆபாசமாக பேசியது, தாக்கி யது என 2 பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, துறை ரீதியான விசாரணையின் அடிப்படையில், மதுவிலக்கு பிரிவு  ஏட்டுகள் செந்தில்குமார், முத்தரசு, சுகவனேஸ்வரன் ஆகிய 3 பேரை யும் பணியிடை நீக்கம் செய்து கௌதம் கோயல் உத்தரவிட்டார்.

திமுக சார்பில் ரத்ததான முகாம்

அவிநாசி, டிச.29- அவிநாசியில் திமுக பேரூராட்சி இளைஞ ரணி மற்றும் களம் அறக்கட்டளை சார்பில்,  ஞாயிறன்று ரத்ததான முகாம் நடைபெற் றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூ ராட்சி திமுக இளைஞரணி சார்பில், அவிநாசி  அரசு மருத்துவமனையில், ரத்ததான முகாம்  ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல் வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் தங்கராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, பேரூ ராட்சித் தலைவர் தனலட்சுமி, ஒன்றியச் செய லாளர் சிவப்பிரகாஷ் உட்பட பலர் கலந்து  கொண்டனர். அதேபோல, அவிநாசி கொங்கு கலையரங்கத்தில் களம் அறக்கட் டளை மற்றும் கொங்கு வேளாளர் அறக்கட் டளை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், ரத்த தான முகாம் நடைபெற்றது. மேலும், குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி போன் றவை நடத்தப்பட்டதில், வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ் வில் திருமுருகன்பூண்டி நகர்மன்றத் தலை வர் குமார், அவிநாசி வட்டாட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சேலம், டிச.29- தாசநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு விழா ஞாயி றன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டியி லுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி முன் னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயி றன்று நடைபெற்றது. 1975 - 76 ஆம் காலக் கட்டத்திலிருந்து 2023 வரை பயின்ற முன்னாள்  மாணவர்கள் பலர், பள்ளி வளாகத்தில் ஒன்று  கூடினர். இதில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும்  கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் களுக்கு முன்னாள் மாணவர்கள் சால்வை, மாலை அணிவித்து, பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த னர்.