தாராபுரம், பிப்.10- தாராபுரம் அடுத்த சின் னக்காம்பாளையம் 4 ஆவது வார்டில் போட்டி யின்றி வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி வேட்பா ளருக்கு பாராட்டு விழா நடை பெற்றது. தாராபுரம் வட்டம், சின்னக் காம்பாளையம் பேரூராட்சி 4 ஆவது வார்டில் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மகு டீஸ்வரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் தாலுகா குழு உறுப் பினர் ஆர்.வெங்கட்ராமன் தலைமை வகித் தார். இதில் சின்னக்காம்பாளையம் பேரூ ராட்சி 4 ஆவது வார்டு உறுப்பினர் மகுடீஸ் வரிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரி விக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் தாராபுரம் நகராட்சி 28 ஆவது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் லெனின் பாரதி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி 8 வார்டு வேட்பாளர் காளிராஜ் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் தாலுகா செய லாளர் என்.கனகராஜ், சம்சீர் அகமது உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.