districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

உதகை, அக்.23- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த் ராஜ் தலைமையிலான காவலர்கள் கோத்தகிரி நகர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மார்க் கெட் பகுதியில் ராஜ்குமார் (54) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவலர்கள், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4,800 பறி முதல் செய்தனர்.


பேருந்து வசதியின்றி பள்ளி குழந்தைகள் பாதிப்பு

உதகை, அக்.23- கூடலூர் - ஆரோட்டுப் பாறை  பகுதிகளில் போதிய போக்குவரத்து வசதியில்லாததால் அப் பகுதி மக்கள் பெரும் சிர மத்திற்குள்ளாகி வருகின்ற னர். குறிப்பாக, அரசு பள்ளி களில் பயிலும் மாணவ, மாண வியர் பேருந்திற்காக நீண்ட  நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  அதன்பின் பேருந்து கிடைத் தாலும் உரிய நேரத்தில் பள்ளிக்கு சென்று சேர முடிவ தில்லை. எனவே, பள்ளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை, மாலை  நேரங்களில் அரசு பேருந்து இயக்க தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனக்காப்பாளரை தாக்கியவர் கைது

உதகை, அக்.23- நீலகிரி மாவட்டம், மசின குடி வனச்சரக வனக்காப்பா ளராக பணியாற்றி வருபவர் சங்கரன் (54). இவர் மசினகுடி பேருந்து நிலையத்தில் வியா ழனன்று நின்று கொண்டி ருந்தார். அப்போது, அங்கு வந்த ஆச்சக்கரை பகுதியை சேர்ந்த சாமியப்பன் (42) என்பவர், தன்னை மான் வேட்டை வழக்கில் சிக்க வைத்து விட்டதாக கூறி திடீ ரென சங்கரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மசினகுடி காவல்நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாமி யப்பனை கைது செய்தனர். 

;