districts

சென்னை தீக்கதிர் நிருபர் மீது தாக்குதல்

கோவை, பிப்.28 –

 சென்னை தீக்கதிர் நிருபர் மீதான காவல்துறையினரின் தாக் குதலை கண்டித்து கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்ட னம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இவ்வமைப்பின் தலைவர் க.தங்ராஜ், செயலாளர் அ.ர.பாபு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊடகத்துறையினரின் பாது காப்பை, தமிழக அரசும், தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும் என கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.சமீப காலமாக ஊடகத்துறையினரை குறிவைத்து கட்டவிழ்த்து விடப் பட்டுள்ள வன்முறை, அச்சுறுத் தல் சம்பவங்கள் கவலையளிப்ப தாக உள்ளன. குறிப்பாக, பாது காப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையினரே, ஊடகத்தினரை தாக்குவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்தகைய சம்பவங்களில் ஒன்றாக,  சென்னையில் தீக்கதிர் நாளிதழின் செய்தியாளர் கவாஸ் கர் இரு தினங்களுக்கு முன்பு போலீசாரால் தாக்கப்பட்டு, அவ ரது கேமிராவை போலீசார் பிடுங் கிச் சென்ற அவலமும் நடைபெற் றுள்ளது. போராட்ட களத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தி யாளர் தாக்குதலுக்கு உள்ளாவது என்பது, மாநிலம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ஊடகத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியு றுத்தி கேட்டுக்கொள்கிறது.  அதே சமயம், இதுபோன்ற சம் பவங்கள் நடப்பது முதல் முறை அல்ல என்பதை வேதனையோடு நினைவு கூர வேண்டியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை ஒட் டிய காலகட்டம் என்பதால் அனைத்துத் தரப்பிலிருந்தும் விருப்பு வெறுப்புகளை கடந்து, தேர்தல் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை ஊடகத்தினருக்கு உள் ளது. ஆனால் இதுகுறித்த அடிப் படை புரிதல் கூட இல்லாமல், அர சியல் கட்சியினர் சிலர் செய்தியா ளர்களை தனிப்பட்ட ரீதியில் அச் சுறுத்துவதும், தாக்குவதும் தொடர்கிறது. சமீபத்தில் கோவை யில் அடுத்தடுத்து மூன்று சம்பவங் கள் நடைபெற்றுள்ளது.  

விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும் முன்பே முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும் என்ற அடிப்படை யில், மேற்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, அனைத்து அரசியல் அமைப்புகளும் தத்தமது கட்சியி னருக்கு தகுந்த முறையில் அறிவு றுத்தல்களை வழங்க வேண்டும். ஊடகத்தினரின் பணி குறித்தும், அவர்கள் படும் சிரமம் குறித்தும், அவர்களை எதிர்கட்சியினர் போல அணுகுவது சரியல்ல என்ப தையும் கட்சி தொண்டர்களுக்கு விளக்கி கூற வேண்டும்.

அதேசமயம், ஊடகத்துறையி னர் மீது நடத்தப்படும் தாக்குத லும், அச்சுறுத்தலும் ஜனநாய கத்தையே கேலிக்கூத்தாகிவிடும் என்பதை உணர்ந்து, அவர்களது பாதுகாப்புக்கு காவல்துறை துணை நிற்க வேண்டும். தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் ஊடகத்துறையினரின் பாது காப்பை எந்தவித பாரபட்சமு மின்றி உறுதி செய்ய வேண்டும் என்பதை கோயமுத்தூர் பத்திரி கையாளர் மன்றம் வலியுறுத்து கிறது.

;