districts

img

ஈஷா யோகா மையத்தில் 2 ஆவது நாளாக விசாரணை

கோயம்புத்தூர், அக்.2-  உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோவை வெள்ளியங்கிரி மலை அடி வாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா  மையத்தில், இரண்டாவது நாளாக அக்டோபர் 2 புதனன்றும் போலீசார்  மற்றும் சமூகநலத்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது மகள்களை பார்க்க அனு மதி மறுக்கப்படுவதாக பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந் தார். இந்த வழக்கு விசாரணையின் போது ஈஷா மையம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள், வழக்குகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனை யடுத்து ஈஷா யோகா மையத்தின் மீது உள்ள வழக்குகள் உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்து விரிவான விசா ரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், மாவட்ட  சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா  மற்றும் குழந்தைகள் நலத்துறை அதி காரிகள் விசாரணை மேற்கொண்டனர். 6 குழுக்களாக பிரிந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. முதல் நாளான செவ்வாயன்று 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக புதனன்றும் விசாரணை நடைபெற்றது.

ஈஷா யோகா மையத்தின் வளாகத்தில் தொண்டர்கள்  தங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகளில் போலீசார் சோதனையிட்டனர். வெளிநாட்டில் இருந்து வந்து தங்கி யுள்ள நபர்களிடம் விசா உள்ளிட்ட ஆவ ணங்கள் முறையாக இருக்கிறதா? என்பது குறித்த சோதனையும் நடை பெற்றது. ஈஷா பள்ளி வளாகத்தில் தங்கி படிக்கும் குழந்தைகளிடம், குழந்தைகள் நல அதிகாரிகள் விசார ணை மேற்கொண்டனர். பெண்களிட மும் விசாரிக்கப்பட்டது.  இதனை எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ கேமிராவிலும் சமூக நலத்துறை அதி காரிகள் பதிவு செய்தனர். 

இதனிடையே கடந்த மாதம், அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்ட லில் ஈடுபட்டதாக போக்சோ வழக்கில்  கைது செய்யப்பட்ட ஈஷா மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர் சரவண மூர்த்தி கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்.4 இல் அறிக்கை தாக்கல் 

செவ்வாயன்று இரவு விசார ணைக்குப் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஈஷா முழு ஒத்துழைப்பு வழங்கி யுள்ளது.   துறவிகள் உள்ளிட்ட அனை வர் இடத்திலும் அனைத்து கோணங் களிலும் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்.  நீதி மன்றத்தில் வழக்கு உள்ளதால் விசா ரணை விவரங்களை தெரிவிக்க இய லாது என்று தெரிவித்தார்.