districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நைலான் வேலியில் சிக்கி மீண்டும் ஒரு மான் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம், ஆக.18- மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கல்லார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆண் புள்ளி  மான் ஒன்று அங்கிருந்த நைலான் வேலியில் சிக்கி பரிதாப மாக உயிரிழந்தது. அடுத்தடுத்து ஒரே இடத்தில் இரண்டு  மான்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் ஏராளமான மான்  கூட்டங்கள் வாழ்ந்து வருகின்றன. கல்லார் போன்ற வனத்தை  ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள தோட்டங்களுக்குள் மான்,  காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் நுழைவதை தடுக்க  தோட்டத்தை சுற்றி நைலான் வலை வேலி அமைக்கப்படு கிறது. தரையில் இருந்து சுமார் முதல் ஐந்தடி உயரத்தில்  கட்டப்படும் இந்த வலை போன்ற எளிதில் துண்டிக்கப்பட முடியாத நைலான் வேலியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், நீண்ட கொம்புகளுடன் கூடிய ஆண் புள்ளி மான்கள் கடக்க  முற்படும் போது அதில் சிக்கி கொள்கின்றன. வலையில் மாட்டிக்கொள்ளும் மான் பதட்டத்துடன் தப்பிக்க துள்ளும்  போது அதன் கொம்புகளே எதிரியாக மாறி வலை மானின்  தலை பாகத்தை முற்றிலுமாக சுற்றி விடுகின்றன. இதனால்  வலையில் இருந்து வெளியேற இயலாமல் இறந்து விடு கிறது.  கடந்த 11 ம் தேதி இதே கல்லார் பகுதியில் ஒரு தனியார்  நர்சரி தோட்டத்தில் கட்டபட்டிருந்த நைலான் வேலியில் சிக்கி  ஆண் புள்ளிமானொன்று இறந்த நிலையில், ஒரு வார இடை வெளியில் மீண்டும் ஒரு மான் வேலியில் சிக்கி பலியாகி உள்ளது வன உயிரின ஆர்வலர்களை கவலையடைய வைத் துள்ளது. கல்லார் பகுதியில் வலையில் சிக்கி மான் இறந்து  கிடப்பது குறித்து தகவல் கிடைக்க பெற்றதும் சம்பவ இடத் திற்கு சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண் டனர். மேலும், மானின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மீண்டும்  இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வனத்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வன  ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது

கோவை, ஆக.18- கோவை மாவட்டம், துடி யலூர் அருகே வசிக்கும் 15  வயது மாணவி, இவரது வீட்டின் அருகே திருச்சி  மாவட்டத்தைச் சேர்ந்த பாரத்  (20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.  பாரத்துக்கு, பள்ளி மாணவி யுடன் பழக்கம் ஏற்பட்டு, இரு வரும் காதலித்து வந்ததாக  கூறப்படுகிறது. பாரத் மாணவியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், 3 மாத கர்ப்ப மாக இருப்பதாகதெரிகிறது.  இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர், துடிய லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார ளித்தனர். அதன்பேரில் ,  பாரத் மீது போலீசார் வழக்கு  பதிவு செய்து போக்சோ சட் டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சிறப்பு வகுப்பு என்று கொடுமை செய்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

திருப்பூர், ஆக. 18 - அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் சிறப்பு  வகுப்பு என்று மாணவர்களை கொடுமைப்படுத்தும் தனியார்  பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி சுற்ற றிக்கை அனுப்பி உள்ளார். புதன்கிழமை அனைத்து தனியார் பள்ளிகளுக்கு அவர்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்  கருதி அரசு விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்  கிழமைகள், பொது விடுமுறை நாட்கள் ஆகியவற்றில் பள்ளி  செயல்படக் கூடாது என்று அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இந்த  விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணாக் கர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், 10  மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு காலை 7.30 மணி  முதல் மாலை 7 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணாக் கர்களைக் கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் மாணாக் கர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு வேறு மனநிலைக்கு தள் ளப்பட்டுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் மெட்ரிகு லேஷன் பள்ளிகள் இயக்குநர் பல முறை அறிவுறுத்தியும், பள்ளி முதல்வர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியும் இதனை மீறி  மாணாக்கர்களை வரவழைத்து செயல்படும் பள்ளிகள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கு  பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

ஆக. 21இல் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

திருப்பூர், ஆக. 18 -  திருப்பூர் மாநகராட்சியில் ஆகஸ்ட் 21 ஞாயிறன்று கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. திருப்பூர் மாநகராட்சியில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 9 லட்சத்து 41 ஆயிரத்து 508 பேர் உள்ளனர். இவர்க ளில் இதுவரை 8 லட்சத்து 14 ஆயிரத்து 463 பேருக்கு முதல்  தவணையும், 6 லட்சத்து 24 ஆயிரத்து 617 பேருக்கு இரண்டாம்  தவணையும், 53 ஆயிரத்து 257 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும்  வழங்கப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 45 பேர் முதல் தவணை தடுப் பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை. 1 லட்சத்து 89 ஆயிரத்து  846 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி யுள்ளது. இந்நிலையில் வரும் ஞாயிறன்று மொத்தம் 20 ஆயி ரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து வார்டு பகுதிகளிலும் பொது மக்களுக்கு இத்தடுப் பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இம்மாந கராட்சியில் அரசு மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகா தார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக் கூடங் கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்பட மொத்தம்  190 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை  சிறப்பு முகாம் நடைபெறும். முகாமுக்குத் தேவையான கோவிசீல்டு 4 ஆயிரத்து நூறு டோஸ், கோவேக்சின் 36  ஆயிரத்து 60 டோஸ், கார்பிவேக்ஸ் ஆயிரம் டோஸ் என  மொத்தம் 41 ஆயிரத்து 160 டோஸ்கள் தயார் நிலையில் இருப்பு  வைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்ப டுத்திக் கொள்ளும்படி மாநகராட்சி மக்களை ஆணையர் கிராந்தி குமார் பாடி கேட்டுக் கொண்டுள்ளார்.

காய்கறி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

தாராபுரம், ஆக.18- தாராபுரத்தில் காய்கறி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார். தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டிணம் பாப்பையன்பு தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ராஜேஷ் (35)  தாராபுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கடை நடத்தி வருகி றார். இவருக்கு திருமணமாகி சர்மி என்ற மனைவியும், ஹர்சத்  என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு மகனுடன் சர்மி தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். ராஜேஷ் பெற்றோருடன் பாப்பையன்புதூர் பகுதி யில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ராஜேசின் தாயார் கடைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜேஷ்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவ லறிந்த தாராபுரம் காவல்துறையினர் ராஜேசின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். தாராபுரம் காவல் ஆய்வாளர்  மணிகண்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்.

குற்றவழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

தாராபுரம், ஆக. 18- தாராபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு டைய நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். தாராபுரம் வட்டம் மாலமேடு ஊத்தூர் ரைஸ்மில் தோட் டத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் ஜெகதீஸ் (38). இவர்  மீது தாராபுரம் மற்றும் பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு மற்றும் ஆள்கடத்தல், அடிதடி என பல்வேறு வழக்கு கள் உள்ளது. கடந்த மார்ச் 30 அன்று வங்கியில் இருந்து  பணம் எடுத்து வந்த விவசாயி துரைராஜ் என்பவரிடமிருந்து ரூ.  6 லட்சத்தை திருடிய வழக்கு, தளவாய்பட்டிணம் பகுதியை  சேர்ந்த மாரிமுத்து என்பவரிடமிருந்து ரூ. 2 லட்சத்தை பறித்து  சென்ற வழக்கு மற்றும் பல்வேறு திருட்டு , ஆள்கடத்தல் வழக் குகள் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து குற்றச் சம்பவங்க ளில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து குற்றசம்பவங்களில் ஈடுப டுவதை தடுக்கும் பொருட்டு ஜெகதீசை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் சசாங் சாய் பரிந்துரையின் பேரில் மாவட்ட  ஆட்சியர் வினீத்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய  உத்தரவிட்டார். இதையடுத்து தாராபுரம் காவல் ஆய்வாளர்  மணிகண்டன் ஜெகதீசை கைது செய்தார். பின்னர் கோவை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கருவலூரில் மின் தடை

அவிநாசி, ஆக.18- கருவலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக ளில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்ப தால், சனிக்கிழமை 20ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை  4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக் காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளை யம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பி லிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறி யாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப் பாளையம், செல்லப்பாளையம்.

விசைத்தறி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய  சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் முதல்வருக்கு கடிதம்

திருப்பூர், ஆக.18 - விசைத்தறிக்கு அரசு அறிவித்துள்ள மின்  கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சாமளாபுரம் பேரூராட்சிமன்றத் தலை வர் விநாயகா பழனிச்சாமி தமிழக முதல்வ ருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, திருப் பூர் ஆகிய இரு மாவட்டங்களில் விசைத்தறி  தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் குடும்பங்கள்  நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகின்றன. கடந்த  2014-ஆம் ஆண்டு முதல் கூலி உயர்வு பெறா மல் சென்ற மார்ச் மாதம் தான் தமிழக அரசு  முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத் தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின் றனர். மேலும் வரலாறு காணாத பஞ்சு விலை  ஏற்றத்தால் மாதம் 15 நாட்கள் கூட தொழிலை  நடத்த முடியாத நிலையில் உள்ளனர். ஏற்க னவே கடும் நெருக்கடியில் உள்ள இந்த  தொழிலுக்கு மின் கட்டண உயர்வு பேரிடி யாக அமைந்துள்ளது. விசைத்தறிகளில் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் இரவு பகல் பாராமல் உழைத்தும் பொருளா தார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு இருக் கின்றனர். எனவே அழிந்து வரும்  நிலையில்  உள்ள இத்தொழிலையும், நேரடியாகவும்,  மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அரசு அறி வித்துள்ள விசைத்தறி மின் கட்டண உயர்வை  ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

பட்டுக்கோட்டையார் நகர் பட்டா பிரச்சனை: தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு

திருப்பூர், ஆக.18 -  திருப்பூர் மாநகராட்சி 55ஆவது வார்டு பட் டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச்  சங்கத்தின் கூட்டம் குடியிருப்போர் நலச் சங் கத்தின் தலைவர் என்.சேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கச் செயலாளர்  எஸ்.சுந்தரம், பொருளாளர் கு.ந.தங்கராசு, துணை தலைவர் கணேசன், துணை செயலா ளர் சீனிவாசன் உள்பட நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் 199 குடும்பங்கள் கடந்து 32 ஆண்டு காலமாக குடியிருந்து வரு கின்றனர். இது அரசு புறம்போக்கு நிலம் என்ப தால் வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசின் மக்கள் பிரதிநிதிகள் மூலம் மனுக்கள் கொடுத்தும், உரிய நடவ டிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி யும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்  மெத்தனப் போக்கால் இன்று வரை தீர்வு  ஏற்படவில்லை. இதனால் மக்கள் மிகுந்த மன  உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வேறு  வழியின்றி அதிகாரிகளின் மெத்தனப்  போக்கை கைவிட்டு, நீண்ட காலமாக நிலு வையில் உள்ள பட்டா பிரச்சினைக்கு நிரந் தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி செப்டம்பர் இரண்டாம்  வாரத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட் டம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் ஏகம னதாக முடிவெடுக்கப்பட்டது.

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார்

திருப்பூர், ஆக.18 - திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே யூனிவர்சல் ஓவர்சீஸ் பிளேஸ்மெண்ட் சர்வீஸ் என்ற பெயரில் ஜாகிர் உசேன் என் பவர் கடந்த பல மாதங்களாக தனியார் வேலைவாய்ப்பு மையத்தை நடத்தி வருகி றார்.  பிற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி யுனி வர்சல் ஓவர்சீஸ் நிறுவனத்தை நாடி வந்த பொழுது துபாய் மற்றும் கனடா உள்ளிட்ட பல் வேறு நாடுகளில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவ தாக ஆசை வார்த்தை கூறி, வேலை தேடி வந்த இளைஞர்களிடம் ரூ.50 ஆயிரம் முதல் 2  லட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருக்கி றார். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங் களை வாங்கிக் கொண்டு பணி எதுவும் வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்ததாக வேலை தேடிச் சென்று பணத்தை இழந்த இளைஞர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலை யத்தில் புகார் மனு அளித்தனர்.  இதுகுறித்து புகார் அளிக்க வந்த விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந் தன் என்பவர் கூறும்போது, ஜாகிர் உசேன்  வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக  பணம் வாங்கிக் கொண்டு 200க்கும் மேற்பட்ட வர்களிடம் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு  மோசடி செய்திருப்பதாக குற்றம் சாடினார்.மற்றொரு புகார்தாரர் திருச்சியை சேர்ந்த ராம கிருஷ்ணன் என்பவர் கூறும்போது, தங்களது  பாஸ்போர்ட் மற்றும் வேலை வாங்கித் தருவ தற்காக பணத்தையும் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டினார்.இது  குறித்து புகார் தெரிவித்தாலும் உரிய நடவ டிக்கை எடுக்காமல் மோசடி செய்த ஜாகிர்  உசேனுக்கு ஆதரவாக  காவல் துறையினர் செயல்படுவதாகவும் புகார்தாரர்கள் கூறி னர்.  போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாங்கள் இழந்த பணத்தை திருப்பி  பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.

நினைவக பூட்டை உடைத்த விவகாரம்   பாஜக நிர்வாகி சிறையில் அடைப்பு

தருமபுரி, ஆக.18- பாரத மாதா சிலை உள்ள நினைவக பூட்டை உடைத்த பாஜக நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டார்.  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிர மணிய சிவா நினைவிடம் உள்ளது. இதே வளாகத்தில் பாரத மாதா சிலை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தமி ழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்விடத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு  பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்ட பாஜகவினர் கதவின் பூட்டை உடைத்தனர்.  கலவரம் செய்வது, கதவை உடைப்பது என்கிற போராட்ட வடிவத்தையே அரசியல் நிலைப்பாடாக வைத்துள்ள பாஜக வின் செயலை கண்டித்தும், பாரபட்சமின்றி அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சிதயின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார் கண்டித்து அறிக்கை விடுத்தி ருந்தார்.  இந்நிலையில், பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜகவினர் சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும், பூட்டு உடைக்கும் இயக்கத்திற்கு தலைமை தாங்கிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை கடந்த ஆக.14 ஆம் தேதியன்று காலை கைது செய்தனர். இதைய டுத்து மருத்துவ பரிசோதணைக்காக கே.பி.ராமலிங்கம் தரும புரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப் போது அவர், தனக்கு ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலி இருப்ப தாக  தெரிவித்தார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனி டையே அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பென்னாகரம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்நிலையில் சிகிச்சைக்கு பின் அவருக்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை  என மருத்து சான்றிதழ் கொடுத்தனர். ஆனால் அவர் சிறைக்கு செல்ல மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், வியாழனன்று காலை அவரை டிஸ்சார்ஜ் செய்யலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து  அவரை அழைத்துச் சென்று சிறையில் அடைக்க பாப்பா ரப்பட்டி போலீசார் வந்தனர். ஆனால் அவர், தனக்கு நெஞ்சு  வலிப்பதாக மீண்டும் கூறி நாடகத்தை ஆரம்பித்தார். ஆனால் போலீசார் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத் தனர்.

விமானப்படை வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை, ஆக.18- இந்திய விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் இந்திய விமானப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. இந்திய விமானப்படையில் உள்ள பல்வேறு பிரிவுகள், அதில் உள்ள வேலை வாய்ப்புகள், அதற்கான கல்வித்தகுதிகள் ஆகியவை குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்வின் ஒருபகுதியாக இந்திய விமானப்படை சார்பில் கொண்டு வரப்பட்ட சிறப்பு விழிப்புணர்வு வாகனத்தினை கல் லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்நிகழ்ச் சியில் இந்திய விமானப்படை அதிகாரிகள், கல்லூரி ஆசிரி யர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது 

இளம்பிள்ளை, ஆக.18- சங்ககிரி, பக்காலியூ ரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனது நிலத்தை அள வீடு செய்து தரக்கோரி சங்க கிரி வட்ட நில அளவைத்  துறையில் விண்ணப்பித்துள் ளார். நிலத்தை அளவீடு செய்ய சங்ககிரி நில அள வையாளர் வைத்தீஸ்குமார்  (40) ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட் டதாக கூறப்படுகிறது. இதுகு றித்து கணேசன் லஞ்சம் ஒழிப்பு போலீசாரிடம் புகார்  தெரிவித்தார். இதையடுத்து  ரசாயனம் தடவிய ரூ.2 ஆயி ரத்தை கணேசன் வைத்தீஸ் குமாரிடம் கொடுத்தார். அப் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ ரைக் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
 


 

;