districts

கூடலூரில் மேலும் 4 கும்கி யானைகள்

உதகை, அக்.23- கூடலூர் – முதுமலை எல்லையில் காட்டு  யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மேலும் 4 கும்கி யானைகள் வர வழைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகன் என்ற ஒற்றை யானை தொடர்ந்து விவசாய விளை நிலங்கள் மற்றும் வீடுகளை சேதப் படுத்தி வருகிறது. இதையடுத்து இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட் டும் வகையில் சங்கர், கிருஷ்ணா ஆகிய  இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட் டுள்ளது. இந்த கும்கி யானைகள் மூலம் ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சி பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியினை மேற் கொண்டுள்ளனர்.  இந்நிலையில், முதுமலையில் இருந்து வசிம், மூர்த்தி, ஜம்பு, கணேஷ் ஆகிய மேலும்  நான்கு கும்கி யானைகள் கூடலூர், முதுமலை எல்லையான போஸ்பாரா பகுதிக்கு அழைத்து வரப்பட்டன. இதன்பின் அங்கி ருந்து தொரப்பள்ளி வரை கும்கி யானைகள் மூலம் தீவிரமாக ரோந்து சென்று விநா யகன் யானையை தேடினர். மேலும் ஊருக் குள் விநாயகன் நுழைவதற்காக வந்தால் கும்கி யானைகளை வைத்து விரட்டவும் திட்ட மிட்டுள்ளனர்.  இதுகுறித்து வனத்துறையினர் கூறுகை யில், விநாயகன் உட்பட காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுமலையில் இருந்து கூடுத லாக 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு விநாயகன் யானை வரும் இடங்களில் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன. கும்கி யானைகள் இருப் பதால் காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்பு இல்லை. இதனால் அதிகாரிகள் மறு  உத்தரவு வரும்வரை கும்கி யானைகள் கூட லூர்- முதுமலை எல்லைகளில் நிறுத்தி வைக் கப்பட்டு கண்காணிக்கப்படும் என தெரிவித்த னர்.

;