districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கனமழையால் நீலகிரியில் 17 வீடுகள் சேதம்

உதகை, ஆக.7- தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்து உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 17 வீடுகள் சேதமடைந் துள்ளன.7 வீடுகள் முற்றிலுமாக சேத மடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் முதல் பெய்து வந்த நிலையில் கடந்த ஆக.3 ஆம் தேதி முதல் வளிமண்டல சுழற்சி காரணமாக தீவிரமடைந்து உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் இந்த தொடர் மழை காரணமாக அணைக ளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய நிலங்களில் நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் வாழை, காய்கறி பயிர்கள் பாதிக்கப்பட்டுள் ளன. உதகை படகு இல்லம், தாவரவி யல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற் றுலா பயணிகள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டது. இதற்கிடையே தொடர் மழையால் உதகையை அடுத்த லவ்டேல் பகுதி யில் 2 வீடுகள் மற்றும் தண்டவாளத் தின் மீது பெரிய மரம் விழுந்தது. இதில், நல்வாய்ப்பாக வீட்டிற்குள் இருந்தவர்க ளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  இதன்பின் தண்டவாளத்தில் இருந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது. மரம் விழுந்த தால் குன்னூர் - உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மழை மற்றும் காற்றினால் பிங்கர் போஸ்ட் சாலையில் மரங்கள் முறிந்து சாலைகள் மற்றும் மின் கம்பங்கள் மீது  விழுந்தது. இதனால் மின் மற்றும் குடி நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதை யடுத்து தீயணைப்பு மற்றும் மின் துறை ஊழியர்கள் மீட்புப் பணியில் தீவி ரமாக ஈடுபட்டனர். பலத்த மழையால் 17 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன. 7 வீடுகள் முழு வதும் சேதம் அடைந்துள்ளது. இதைய டுத்து அந்த வீடுகளுக்கு வருவாய்த் துறையினர் தலா ரூ.4 ஆயிரத்து 500  நிவாரணத்தொகையினை வழங்கினர். இதேபோல் எமரால்டு அடுத்த முள்ளி கொரை உள்பட குந்தா சுற்றுவட்டார பகு திகளில் ஆங்காங்கே சாலையில் மரம் விழுந்தது. ஒரு சில இடங்களில் மண்  சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த  2 நாட்களாக மின்சார பாதிப்பு ஏற்படுவ தால் பார்சன்ஸ்வேலி அணையிலி ருந்து உதகை நகராட்சிக்கு குடிநீர் விநி யோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது.

வெள்ளலூர் தரைப்பாலம் நொய்யலில் மீண்டும் மூழ்கியது

கோவை, ஆக.7- வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தரைப்பாலம் மீண்டும் நொய்யல் ஆற்று வெள்ளத்தில்  மூழ்கியது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது‌. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நொய் யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சித்திரைச்சாவடி அணை, சுண்ணாம்பு கால்வாய்  தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரிக்கி றது. இந்நிலையில், வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையி லிருந்த தரைமட்ட பாலம் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். இதனால் போக்குவரத்து தடைபட்டு வந் தது. இதையடுத்து இந்த சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் நொய் யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் வானக போக்குவதரத் திற்கு தடை விதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் 8 கிலோ மீட்டர் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட் டது. இந்நிலையில், மீண்டும் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலை யில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுப்பாதையான ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வரு வதால் அந்த சாலையிலும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. போத்தனூர் சாலையும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை 5 பேர் கைது

சேலம், ஆக.7- சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக காவல் துறை யினர் அதிரடியாக சோதனை  நடத்தி கஞ்சா மற்றும் புகை யிலை பொருட்கள் விற் பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந் நிலையில், அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், பள்ளப் பட்டி, இரும்பாலை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ற தாக மோகன்ராஜ், கண் ணன், ராம்கி உள்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும்,  அவர் களிடமிருந்து மொத்தம் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செவிலியர், மருந்தாளுநர்களுக்கு அழைப்பு

ஈரோடு, ஆக.7- ஈரோடு மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங் களில் உள்ள செவிலியர் மற்றும் மருந்தாளுநர் பணியிடங்க ளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் கே.சிவ குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் நகர்ப்புற சுகாதார செவிலியர் மற்றும் மருந்தாளுநர் பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. தகுதியுள்ள, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது சான்றிதழ்க ளின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங் களை ஆணையர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு 638001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் ஆக.17 ஆம் தேதிக் குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாநக ராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பொதுசுகாதாரப் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கோவையில் ஆக.13ல் மக்கள் நீதிமன்றம்

கோவை, ஆக.7- கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆக.13 ஆம் தேதியன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றவுள்ளது. கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் ஆக.13 ஆம் தேதியன்று கோவை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்றம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால் பாறை, சூலூர், மதுக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள நீதி மன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக் கூடிய சிறு, சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வாகன விபத்து  வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் மற் றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் உள்ளிட்டவற்றிற்கு உடனடியாக தீர்வுபெற்றுக்கொள்ளலாம். எனவே, மேற் கண்ட வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வில் வரும் ஆக.8 ஆம் தேதி (இன்று) முதல் 12 ஆம் தேதி  வரை சிறப்பு அமர்வுகள் நடைபெறுகிறது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி காட்டெருமை பலி

உதகை, ஆக.7- கோத்தகிரி அருகே கெட்டிக்கம்பை கிராம பகுதி யில் உள்ள தனியார் தேயி லைத் தோட்டத்தில் காட்டெ ருமை ஒன்று மேய்ந்து கொண் டிருந்தது. அப்போது அங்கி ருந்த மரக்கிளை ஒன்று எதிர் பாராத விதமாக முறிந்து, மின் கம்பிகள் மீது விழுந்தது. இத னால் மின் கம்பிகள் அறுந்து தேயிலை தோட்டத்தில் விழுந் ததில், அங்கு மேய்ச்சலில் ஈடுபட்ட காட்டெருமை மின் கம்பிகளை உரசியது. இதில் மின்சாரம் தாக்கி காட்டெ ருமை உயிரிழந்தது. இதுகு றித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை, மின்வாரியத்தினர், இறந்து கிடந்த காட்டெருமை யின் உடலை பிரேத பரிசோ தனை செய்து, அங்கேயே புதைத்தனர்.

கைத்தறி தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, ஆக.7- கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் களை அழிவிலிருந்து காப்பாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  பவானி தாலுகா மாநாடு வாய்க்கால்பாளை யத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் ஞாயி றன்று பெரியசாமி தலைமையில் நடைபெற் றது. மாநாட்டில் மாவட்ட செயலாளர் சசி  துவக்கவுரையாற்றினார். வேலையறிக் கையை‌ செயலாளர் கந்தசாமி முன்வைத் தார். சிஐடியு தலைவர் சி.முருகேசன் வாழ்த்து ரையாற்றினார். இதில், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். அரிசிக்கு விதித்த ஜிஎஸ்டி வரியை திரும்பப்பெற வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் பவானி  தாலுகா தலைவராக கந்தசாமி, செயலாள ராக கோபாலகண்ணன், பொருளாளராக பிர காஷ், துணைத்தலைவராக சூர்யா, துணைச் செயலாளராக பூபதிராஜா உட்பட 15 பேர் கொண்ட தாலுகாக்குழு தேர்வு செய்யப்பட் டது. முடிவில், மாவட்ட தலைவர் விஸ்வ நாதன் நிறைவுரையாற்றினார். கோபால கண் ணன் நன்றி கூறினார்.  ஈரோடு தாலுகா வாலிபர் சங்கத்தின் ஈரோடு தாலுகா 15 ஆவது மாநாடு ஈரோடு டி.பி.முத்துசாமி நினை வகத்தில் பி.அன்பு ஜனாதிபதி  தலைமை யில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் வாழ்த்துரையாற்றினார்.  இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஈரோடு தாலுகா தலைவராக எம்.சதீஸ்குமார், செயலாளராக பி.அன்பு ஜனாதிபதி, பொருளாளராக வி.மோகன் உள் ளிட்ட 14 பேர் கொண்ட தாலுகாக்குழு தேர்வு  செய்யப்பட்டது. வாலிபர் சங்க மாவட்ட தலை வர் வி.ஏ.விஸ்வநாதன் நிறைவுரையாற்றி னார். சதீஸ் நன்றி கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை

நாமக்கல், ஆக.7- பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ள மழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண உதவித்தொகை யினை தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.மதிவேந்தன் ஆகியோர் வழங் கினர். மேட்டூர் அணை முழு கொள்ள ளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறக் கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் காவிரி ஆற்றில் நீரின் வரத்து அதிக ரித்து, காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந் துள்ளது. இதனால், குமாரபாளையம் நகராட்சி, இந்திரா நகர், மணிமேகலை வீதி, அண்ணா நகர் பழைய பாலம், பாலக்கரை ஆகிய பகுதிகளை சேர்ந்த  112 குடும்பங்களை சேர்ந்த 325 பொது மக்களும், அங்காளம்மன் கோவில் வீதி  பூசாரி காடு பகுதிகளை சேர்ந்த 45 குடும் பங்களை சேர்ந்த 132 பொதுமக்களும், கலைமகள் வீதியை சேர்ந்த 101 குடும் பங்களை சேர்ந்த 239 பொதுமக்களும், எஸ்.எஸ்.எம்.வீடு பின்புறப் பகுதியை சேர்ந்த 24 குடும்பங்களை சேர்ந்த 53 பொதுமக்களும் நிவாரண முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பள்ளிபாளையம் நக ராட்சி, ஜனதா நகர், ஜே.ஜே.நகர் பகுதி களை சேர்ந்த 116 குடும்பங்களை சேர்ந்த 349 பொதுமக்களும், பாவடித்தெரு, இந் திரா நகர் மற்றும் சத்யா நகர் பகுதிக சேர்ந்த 110 குடும்பங்களை சேர்ந்த 359 பொதுமக்களும், குமரன் நகர் பகு தியை சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்த  27 பொதுமக்களும், நாட்டாகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த 21 குடும்பங் களை சேர்ந்த 64 பொதுமக்களும், காவேரி நதி ஓர தெரு பகுதியை சேர்ந்த 42 குடும்பங்களை சேர்ந்த 113 பொது மக்களும், கலியனூர் கண்ணதாசன் வீதியை சேர்ந்த 6 குடும்பங்களை சேர்ந்த 16 பொதுமக்களும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம் களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொது மக்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகி யோர் நேரில் சந்தித்தனர். இதைய டுத்து பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.4 ஆயிரத்து 500 வீதம் ரொக்கத்தொகை மற்றும் 10  கிலோ அரிசி ஆகிய நிவாரண உதவி களை வழங்கினர். இதில், மாவட்ட கண் காணிப்பு அலுவலர் சி.என்.மகேஸ் வரன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூதாட்டி கொடூர கொலை: கொள்ளையர்கள் வெறிச்செயல்

கோவை, ஆக.7- கோவையில் தனியாக இருந்த மூதாட்டியின் கை, கால் களை கட்டி போட்டு கொடூரமாக கொலை செய்து, நகையை  திருடிச்சென்ற கொள்ளையர்களை காவல் துறையினர் தீவிர மாக தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், சிந்தாமணி புதூரை அடுத்த காந்தி நகர், திலகர் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி மனைவி சரோ ஜினி (82). இவரது 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் திருமணம் முடிந்து, தனித்தனியாக வசித்து வருகிறார்கள். சரோஜினி யின் கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், சரோ ஜினி சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர், செல்வ லட்சுமிபுத் தில் வசிக்கும் சரோஜினியின் மகன் ரவிச்சந்திரனை செல்போ னில் தொடர்பு கொண்டு, “உங்கள் அம்மா காலையிலிருந்து வீட்டிற்கு வெளியே வரவில்லை. பால் பாக்கெட் இன்னும் எடுக் கப்படாமல் உள்ளது” என தெரிவித்துள்ளார். இதையடுத்து ரவிச்சந்திரன் உடனடியாக தாய் சரோஜினியின் வீட்டிற்கு வந் தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது சரோஜினியின் கைகள், கால்கள் கட்டபட்டு, வாயில் பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டப்பட்டு, தரையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த சூலூர் காவல் துறையினர் சம் பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில்  சரோஜினியை அடையாம் தெரியாத நபர்கள் கை, கால்களை கட்டிப்போட்டு கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தி லிருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி, விரலில் அணிந்திருந்த மோதி ரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையி னர், இச்சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பருத்தி ஏலம்

தாராபுரம், ஆக.7- திருப்பூர் மாவட்டம், மூல னூர் ஒழுங்குமுறை விற்ப னைகூட முதுநிலை செய லாளர் ஆர்.பாலச்சந்திரன் அறிக்கையில் கூறியிருப்ப தாவது, மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் நடை பெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங் களை சேர்ந்த 901 விவ சாயிகள் பருத்தியை விற் பனைக்காக கொண்டு வந்தி ருந்தனர்.  அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய பல் வேறு பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத் தில் பங்கேற்றனர். அதிக பட்ச விலையாக குவிண் டால் ஒன்றிற்கு ரூ.12 ஆயி ரத்து 269ம், குறைந்தபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 550ம், சராசரி விலையாக ரூ. 11 ஆயிரத்து 550க்கும் விலை போனது. மொத்தம் 9,169 மூட்டைகள் 2 ஆயிரத்து 976 குவிண்டால்  பருத்தி ரூ. 3 கோடியே 28  லட்சத்து 73 ஆயிரத்து 869க்கு  விற்பனையானது.

மின்தடை

தாராபுரம், ஆக 7- வடுகபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்க ளன்று (இன்று) நடைபெற உள்ளது. இதனால் வடுக பட்டி, சம்மங்கரை, வண்ணா பட்டி, பட்டுத்துறை, வரப் பட்டி, என்சிஜி வலசு, பி.ராம பட்டிணம் மற்றும் மார்க்கம் பட்டி ஆகிய பகுதிகளில் திங்களன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலம்பட்டி சுங்கச்சாவடியை ஆகஸ்ட் 19 க்குள் அகற்ற உத்தரவு

மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

திருப்பூர், ஆக.7- ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் வேலம் பட்டி சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பை அகற்ற உள்ளாட்சி நிர்வாகம் உத்தரவு  பிறப்பித்திருப்பதால், ஞாயிறன்று  மறியல் போராட்டம் ஒத்திவைக்கப் பட்டது. அவிநாசி முதல் அவிநாசி பாளையம் வரையிலானதேசிய நெடுஞ்சாலை 381 இல் வேலம்பட்டி பகுதியில் நீர்நிலை புறம்போக்கில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பை அகற்ற, கடந்த 2018 ஆம் ஆண்டு திருப்பூர் தெற்கு வட்டாட் சியரும், கடந்த ஏப்ரல் 8 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஆனாலும் பொங்கலூர் வட்டார  வளர்ச்சி அலுவலர், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், பலமுறை சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.  அதற்கு பின்பும், உரிய நடவடிக்கை எடுக்காததால் வேலம்பட்டி சுங்கச் சாலை (ம) சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  உத்தரவை அமல் படுத்த கோரி ஞாயிறன்று காலை 10  மணிக்கு அவிநாசிபாளையம் சுங்கத் தில் சாலை மறியல் போராட்டம் அறி விக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கான ஏற்பாடு களை செய்து வந்த நிலையில், வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி  மன்றத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட்  19-க்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும், அவ்வாறு அகற்றா விடில் ஊராட்சி மன்றத்தின் சார்பில் அகற்றப்படும் எனவும் தேசிய  நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் 19 வரை மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வேலம்பட்டி சுங்கச்சாலை (ம) சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

 

;