உடுமலை, ஆக.12- உடுமலை இலக்கியக்களத்தின் 16 ஆவது இலக்கிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர் செல்லத்துரை தலைமை வகித் தார். ஆசிரியர் முனியப்பன் வரவேற்றார், சுப்பிரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் க.ரேவதி கவிக்கோ அப்துல் ரகுமானின் சுட்டு விரல் என்னும் கவிதை நூலை எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து, சிறுகதை எழுத் தாளர் பூங்கொடி பாலமுருகன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட இருவாச்சிசாமி என்னும் சிறார் கதைகள் நூலை அறிமுகம் செய்தார். உடுமலைப்பேட்டை ஸ்ரீ விசாலாட்சி மக ளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் இரா.பவித்ரா எழுத்தாளர் இமயத்தின் பெத்தவன் என்னும் குறுநாவலை அறிமுகம் செய்து வைத்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன் னாள் தலைவரும் பேராசிரியருமான மோகனா கலந்து கொண்டு சிறப்பித்தார். அவரது என்ன பெயர் வைக்கலாம் என்ற கதையை பாராட்டி உடுமலை இலக்கியக் களம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் கவிஞர் இளைய வன் சிவா நன்றி கூறினார்.