districts

img

பூக்கள் விலை வீழ்ச்சி: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஏப். 22- தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ஓசூர் வட்டங்க ளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமை  குடில்ககள் அமைக்கப்பட்டுள்ளன. தாஜ் மஹால், கிரான்ட்காலா, வெள்ளை, மஞ்சள், சிகப்பு ரோஜா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல  வகையான மலர்களும், பல வகையான சாமந்தி களும் சாகுபடி செய்யப்படுகிறது. இது தமிழக  மொத்த மலர் சாகுபடியில் சுமார் 70 சதவிகித மாகும். வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலங்க ளுக்கும் அதிகமாக ஏற்றுமதியாவதுடன் தமிழ கத்திற்குள் பல மாவட்டங்களுக்கும் விற்பனை  செய்யப்படுகிறது. குறிப்பாக  காதலர் தினம்,  புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட சிறப்பு நாட்க ளுக்காக வெளிநாடுகளுக்கு மிக அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து பூக்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தொற்று இரண்டாவது அலையால் தற்போது மலர் விற்ப னையும், விலையும் கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளன. ஒரு ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்ய  பசுமைகுடில் அமைக்க உரம், மருந்துகளுக்கு ஒரு கோடியே 50 லட்சம் வரை செலவாகிறது. மலர் உற்பத்திக்கு இரவில் 17 டிகிரியும் பகல் நேரத்தில் 20 டிகிரி செல்சியசும் வேண்டும். ஆனால் இந்த ஆண்டு பகல் நேரத்தில் 34  டிகிரியும் இரவு நேரத்தில் 22 டிகிரி தட்பவெப்ப  நிலையும் நிலவுகிறது. கடந்த வாரம் இரண்டு நாட்கள் மழை பெய்ததால் சீதோஷ்ண நிலை  ஓரளவு சீரடைந்துள்ளது.

50 முதல் 55 நாட்களுக்கு  பிறகு வர வேண்டிய மலர்கள் தற்போது சீதோஷ்ண நிலை காரணமாக 40 நாட்களி லேயே பூத்து விடுகிறது. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பசுமை குடிலில் செடியிலேயே மலர்கள் அழுகி விடு கிறது. மேலும், விலை கடுமையாக சரிந்துள்ள தால் மலர்களை குப்பையில் கொட்டும் சூழல்  உள்ளதாக ஹரிஷ் என்பவர் கூறினர். மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மானிய விலையில் உரங்கள், பூச்சி மருந்துகள் தேவைக்கேற்ப வழங்க வேண்டும், மலர் சாகு படி விவசாயம் சார்ந்த விவசாயிகளின் வங்கிக்  கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;