கள்ளக்குறிச்சி,பிப்.4- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் நகர்ப்புற அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைஎண் 18004256803, திருக்கோவிலூர் நகராட்சி 91596 96219, உளுந்தூர்பேட்டை நகராட்சி 80980 94226, கள்ளக்குறிச்சி நகராட்சி 73973 89324, சின்னசேலம் பேரூராட்சி 78240 58350, சங்கராபுரம் பேரூராட்சி 78240 58355, தியாகதுருகம் பேரூராட்சி 782405 8356, மணலூர்பேட்டை பேரூராட்சி 78240 58353, வடக்கனந்தல் பேரூராட்சி 78240 58360 ஆகிய தொலைபேசி எண்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.