districts

உதகை 20 ஆயிரம் அலங்கார செடிகளால் ஆன இந்திய வரைபடம்

நீலகிரி, மார்ச் 7-

உதகை தேயிலை பூங்காவில் 20 ஆயிரம் அலங்கார செடிகளை கொண்டு இந்திய வரைபடம் அமைக்கப்பட் டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள ஊட்டி அருகே யுள்ள தொட்டபெட்டாவில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான தேயிலை பூங்கா உள்ளது. இங்கு தேயிலைத் தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் மலர் செடிகள் ஆகி யவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, குழந்தை கள் விளையாடுவதற்கு ஏற்றவாறு விளையாட்டு பொருட் கள் வைக்கப்பட்டுள்ளது. இதை  காண ஏராளாமான சுற்று லாப் பயணிகள் அங்கு செல்கின்றனர். இப்பூங்காவில், புதி தாக 20 ஆயிரம் அலங்காரச் செடிகளை கொண்டு இந்திய வரைபடம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்று லாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. கோடை சீசனின் போது இவ்விரு அலங்காரமும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் என தோட்டக்கலைத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

;