districts

ஈரோடு 3 ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி முதலிடம்

ஈரோடு, ஆக.2- தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாண வர் சேர்க்கையில் நூற்றாண்டு கண்ட புஞ்சை புளியம்பட்டி ஊராட்சி ஒன் றிய அரசு தொடக்கப்பள்ளி முதலி டம் வகிக்கிறது. ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்க லம் –கோவை  தேசிய நெடுஞ்சாலை யில் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ளது புஞ்சை புளியம் பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக் கப்பள்ளி. கடந்த நான்கு தலைமுறை களாக பல்வேறு மாணவ, மாணவி களை உருவாக்கிய இப்பள்ளி கடந்த ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. இங்கு எல்கேஜி முதல் 5  ஆம் வகுப்பு வரை  மாணவ மாணவியர்கள் கல்வி பயில்கிறார் கள். இப்பள்ளியின் தலைமை ஆசிரி யர் முத்து. இப்பள்ளியில் 2014 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக பொறுப் பேற்ற பின்பு பள்ளிக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, கூடுதல் வகுப்ப றைகள், விளையாட்டு உபகரணங் கள் ஆகியவற்றை அரசு அதிகாரி கள் மற்றும் சமூகநல அமைப்புகளின் பங்களிப்பு மூலம் அமைத்துள்ளார். பள்ளியை சுற்றி பயன் தரும் காய் கறிகள் மற்றும் பழத்தோட்டம் அமைத்துள்ளார்.

வாரம் ஒருமுறை சிறப்பு வண்ண சீருடை, அடையாள அட்டை, டைரி, காலனி என மாணவ மாணவியர்களுக்கு வழங்கி தனியார் பள்ளிகளுக்கு இணையாக பள் ளியை உயர்த்தி உள்ளார். மேலும் ஆண்டுதோறும் மாணவ, மாணவி யர்களின் கலைத்திறமையை வெளிப் படுத்தும் வகையில் ஆண்டு விழா மற்றும் மாணவ மாணவியர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக் கும் வகையில் யோகா, கராத்தே, செஸ் விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறார். பவானிசாகர் வட் டாரத்திலேயே ஒரே ஒரு மையமான  மாற்றுத்திறனாளி மாணவர்களுக் கான மையத்தையும் சிறப்புடன் நிர் வகித்து வருகிறார். தனது  சிறப்பான செயல்பாடுக ளால் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும்  அனைத்து பொதுநல அமைப்புகளின் நன்மதிப்பை பெற்ற ஆசிரியர் முத்து தனது பனிக்காலத்தில் 12க்கும் மேற் பட்ட விருதுகளை பெற்றுள்ளார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் பள்ளி நூற்றாண்டுவிழா கொண்டாடும் தருணத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவரின் அர்ப்ப ணிப்பு காரணமாகவும் ஆசிரியர்க ளின் ஒத்துழைப்பு காரணமாகவும் ஆண்டுதோறும் பள்ளியில் சேரும் மாணவ மாணவியர்களின் எண் ணிக்கை உயர்ந்து வருகிறது.

அந்த வகையில்  நூற்றாண்டு  கண்ட புஞ்சை புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த மூன்று வரு டங்களாக அதிகளவில் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர் எண்ணிக் கையில் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 350 மாணவ மாணவியர்களும் 2020ஆம் ஆண்டில் 398 மாணவ மாணவியர்களும் 2021 ஆம் கல்வி ஆண்டில் தற்போது வரை 460 மாணவ மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மட் டும் 170 க்கும் மேற்பட்ட மாணவ மாண வியர்கள் புதிதாக பள்ளியில் சேர்ந் துள்ளனர். இதன்மூலம் ஈரோடு மாவட்ட அளவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிக அளவில் மாணவர் சேர்க்கை செய்த பள்ளி என்ற பெருமையை இப்பள்ளி பெற் றுள்ளது.  மேலும், ஊராட்சி ஒன்றிய பள்ளி களில் அதிக அளவில் மாணவர் எண் ணிக்கை உள்ள பள்ளி என்ற சிறப்பை யும் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்ட அளவில் மாணவர் சேர்க்கை மற் றும் மாணவர் எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடம் பெற்று சாதனை  படைத்து வருவதற்காக பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் களுக்கு கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துக்கள் தெரி வித்து வருகின்றனர்.

;