districts

கரும்பூஞ்சை நோய் தடுப்பு மருந்து தட்டுப்பாட்டை போக்க ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

ஈரோடு, ஆக.5- கரும்பூஞ்சை கண் நோய்க்கு அரசு  மருத்துவமனைகளில் மருந்து தட்டுப் பாடு  ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செய லாளர் ஆர்.ரகுராமன் விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில், சமீப காலமாக கரும் பூஞ்சை கண் நோயினால் சிலர் பாதிக்கப் பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களில் சிலர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் அரசு மருத்துவ மனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்க ளுக்கு, சிகிச்சைக்குப்பின் 7 நாட்க ளுக்கு பொசகோனசோல் மாத்திரை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற் போது அரசு மருத்துவமனைகளில் மேற் படி மாத்திரைகள் இருப்பில் இல்லை என்றும், வெளியில் கடையில் வாங்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மாத்திரைகளை ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து  தனியார் மருந்து கடை களில்  ஏழை, எளிய மக்கள் வாங்க  முடியாமல் அவதி அடைந்து வருகின்ற னர். எனவே, மாவட்ட ஆட்சியர் இது குறித்து அரசின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சென்று கரும் பூஞ்சை கண் நோய்க்கான மருந்து மற் றும் மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லா மல் ஏழை மக்களுக்கு கிடைக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;