districts

img

தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆன்லைன் வகுப்பில் அசத்தும் அரசு பள்ளி

ஈரோடு, ஜூலை 27- தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆன் லைன் வகுப்பில் அசத்தும் கோடேபாளை யம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி யின் செயல்பாட்டை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அடுத்த பவானிசாகர் ஒன்றியத்தில் அமைந் துள்ளது கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மொத்தம் 230 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார் கள். இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மாநில அர சின் நல்லாசிரியர் விருது பெற்றவர். இவர் தலைமையில் ஆசிரியர்கள் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், மற்றும் நன்கொடையா ளர்கள்  உதவியுடன் பள்ளியில் அனைத்து கட் டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய வரு வாய்வழி திறனறித் தேர்வில் இப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கடந்த 8 ஆண் டுகளாக மாநில அளவிலும், மாவட்ட அளவி லும் சாதனை புரிந்து வருகின்றனர். இதன் மூலம் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வீதம், ரூ.48 ஆயிரம் கல்வி  உதவித்தொகை பெறுகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் 58  மாணவ, மாணவிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். தற்போது கடந்த ஒன்றரை  வருடங்களுக் கும் மேலாக கொரானா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால்  மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர். பெரும் பாலும் கிராமப்புற மாணவர்கள் என்பதா லும், பெற்றோர்கள் தினசரி கூலிவேலை செய்து வருபவர்கள் என்பதாலும் நிறைய மாணவர்கள் இடையே செல்போன் இல்லாத நிலை இருந்தது.

கொரானா பரவல் காரண மாக எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என் பது தெரியாத சூழலில் மாணவ, மாணவி யர்களின் கல்வி பாதிக்க வகையில் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது அவ சியம் எனவும், செல்போன்கள் அவசியம் எனவும் ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். அத னைத்தொடர்ந்து அனைத்து பெற்றோர்க ளும் ஆண்ட்ராய்டு செல்போன்களை குழந் தைகளுக்கு வாங்கி தந்தனர். அதன்படி அனைத்து மாணவ, மாணவிகளும் தற்போது ஆன்லைன் வகுப்பில் பங்கெடுத்து வரு கின்றனர்.  பவானிசாகர் ஒன்றியத்தில் முதல் பள்ளி யாக ஆன்லைன் வகுப்பில் கடந்த ஒரு மாத மாக  அசத்தி வருகிறது கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. தற்போது முதல்கட்டமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 54 மாணவ, மாணவிகள் தினசரி ஆன் லைன் வகுப்பில் பங்கேற்கின்றனர். ஆசிரி யர்கள் பூவேந்தன்,வரதராஜன், சசிகலா ஆகி யோர் தினசரி மாணவ-மாணவிகளுக்கு பாடங் களை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு பாடம் முடிந்ததும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெறுகின்றன.

மேலும் ஆன்லைன் வகுப் பில் ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் உடனுக்குடன் பதிலளிக்கின்றனர். இந்தப் புதிய முயற்சி மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பெற்றோரும் தனி யார் பள்ளிகள் போலவே அரசு பள்ளியும் செயல்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள் ளனர். தொடர்ந்து அனைத்து வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கற்றல் திறனை அதிக ரிக்க தங்களால் ஆன அனைத்து முயற்சிகளை யும் செய்யப் போவதாக ஆசிரியர்கள் தெரி வித்தனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியும் ஆன்லைன் வகுப்பில் சிறப் பாக செயல்படுவதற்கு விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந் தன் மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர் கள் வாழ்த்தும், வரவேற்பும் தெரிவித்துள்ள னர். இதைப்போலவே வாய்ப்புள்ள அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்பு களை நடத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

;