districts

img

குண்டேரிப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது அணையை தூர்வாரி உயர்த்திகட்ட கோரிக்கை

கோபி, மே 7- குண்டேரிப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை நிரம்பி உபரிநீர் பவானி ஆற்றில் கலந்து வீணாகிவருவதால் அணையை தூர்வாரி உயர்த்தி கட்ட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள் ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொங்கர் பாளையம் ஊராட்சிக்குட் பட்ட வினோபாநகர் அடர்ந்த வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ளது குண்டேரிப் பள்ளம் அணை.இந்த அணை யின் வலது மற்றும் இடது கரை வாய்க்கால்கள் மூலம் சுமார் 3 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.

மேலும், வனப்பகுதியை ஓட்டியுள்ள அணை என்பதால் யானை, புலி, சிறுத்தை, காட்டெ ருமை, மான், கரடி போன்ற அனைத்து வனவிலங்குக ளுக்கும் குடிநீர் ஆதாரமா கவும் திகழ்கிறது. கடந்த வாரம் அணையின் நீர் மட்டம் 30 அடிக்கும் கீழ் இருந்த நிலையில் நான்கு நாட்களாக மலைக்கிராமங்களில் பெய்த மழையினால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி அணை வேகமாக நிரம்பி வருவதால், 39.39 அடியாக இருந்த நீர்மட்டம் வியாழனன்று பெய்த கன மழையினால் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 9 கன அடி வரை வந்துள்ளதால் அணை நிரம்பி குண்டேரிப் பள்ளம் உபரிநீர் ஓடை வழி யாக அணைக்கு 9 ஆயிரம் கன அடிநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது.

குண் டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கரையோர மக்களை பாது காப்பாக இருக்கும் படி ஒலி பெருக்கி மூலமாக வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.  மேலும் உபரிநீர் ஓடை யின் அருகில் இருக்கும் வினோபாநகர், தோப்பூர், கொங்கர்பாளையம், மோதூர், வாணிப்புத்தூர், பள்ளத்தூர், கள்ளியங்காடு உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத் துள்ளனர். குண்டேரிப்பள் ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்குமேயானால் உபரிநீர் அதிகளவு வெளி யேற்றப்படலாம் என எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் அதிகளவு வெளியேற்றப்படுவதால் அந்த உபரிநீர் பவானி ஆற் றில் கலந்து வீணாகி வருவ தாகவும், அணையை தூர் வாரி உயர்த்தி கட்ட வேண் டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

;