districts

img

வெளி மாவட்டத்திலிருந்து நெல் ஏற்றிவந்த லாரி சிறைபிடிப்பு கோபிச்செட்டிபாளையத்தில் விவசாயிகள் ஆவேசம்

கோபி, ஜன.22- கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பகுதி யில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு வெளி மாவட் டத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிபாளையம் சுற்றுப்பகுதி யில் செல்லும் தடப்பள்ளி, அரக் கன்கோட்டை மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவ டைப் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதனால் தமிழக அரசு வாணிபக் கழகத்தின் சார்பில் 22 இடங்களில் தற்காலிக கொள் முதல் நிலையங்கள் அமைக் கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலை யில், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசனப் பகுதிகளில் இரண்டு நெல் கொள்முதல் நிலை யங்களை மட்டும் செயல்பட அனு மதித்து மற்றவற்றை மூடியுள்ள னர்.

இதனால் காலதாமதமாக அறு வடை செய்யும் நெல்களை விற் பனை செய்ய முடியாமல் விவசாயி கள் அவதியடைந்து வருகின்ற னர்.  இதற்கிடையே, தஞ்சாவூர், அரூர், ஆரணி போன்ற பகுதிகளி லிருந்து கோபிச்செட்டிபாளை யத்தில் உள்ள நெல் வியாபாரிகள், குறைந்த விலைக்கு நெல்களை வாங்கி வந்து கோபியில் செயல் படும் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அதனால் கோபி பகுதி விவசாயிகள் நெல் களை கொள்முதல் செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாக விவசாயி கள் வேதனை அடைந்துள்ளனர்.  

இந்நிலையில், கூகலூர் பகுதி யில் நெல் மூட்டைகளுடன் சென்ற லாரியை விவசாயிகள் மடக்கி பிடித்தனர். அப்போது லாரியில் இருந்த இருவர் தப்பியோடி விடவே லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்தனர். இதில், திருவண் ணாமலை மாவட்டத்தில் இருந்து குறைந்த விலைக்கு நெல்களை வாங்கிய வியாபாரிகள் கோபி அரசு நெல் கொள்முதல் நிலைத் திற்கு விற்பனைக்கு கொண்டு வந்ததாக லாரி ஓட்டுநர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து தவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறையி னர் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட் டது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும், தற்போது வரை வெளி மாவட்டங்களிலிருந்து 50 லோடு களுக்கும் மேல் குறைந்த விலைக்கு நெல்களை வியாபாரிகள் வாங்கி வந்து கோபி அரசு நெல் கொள் முதல் நிலையங்களில் விற்பனை செய்துள்ளதாக காவல் துறையி னர் தெரிவித்தனர். அதேநேரம், இவ்வாறு சட்டத் திற்கு புறம்பாக நெல்களை நெல் களை கொள்முதல் செய்யும் அதி காரிகள் மீதும், சான்றுகள் வழங் கும் அலுவலகங்கள் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வும், இதனை தடுக்க கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என அப்பகுதி நெல் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;