districts

img

50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல் நீர்

ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்குக் கடல் நீர் உள்வாங்கியுள்ளது.

மன்னார் வளைகுடா, லட்சத்தீவு கடல் பகுதியில் வழக்கத்தைவிட 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகமாக  இருக்கும் என்பதால் ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட  கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மன்னார் வளைகுடா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும்  என்பதால்  மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனால் நங்கூரமிட்டு நிறுத்தி  வைக்கப்பட்ட படகுகள் தரைதட்டி நிற்பதால் படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் 50 மீட்டர் தொலைவிற்குக்  கடல் நீர் உள்வாங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

 

;