districts

ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா? வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

அரியலூர், ஆக.16 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய மாநாடு குருவலப்பர் கோவில் மீரா  மஹாலில் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் தலைமையில்  நடைபெற்றது. மாவட்ட தலை வர் அருண்பாண்டியன், மாவட்ட துணை தலைவர் துரை.அருணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஒன்றிய தலைவராக குகன், செயலாள ராக ரவீந்திரன், பொருளாளராக பிரவீன், துணைத் தலைவராக ஹேமநந்தினி, துணைச் செயலாளராக மாரிமுத்து என 11  பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப் பட்டது. கூட்டத்தில் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி என்ற சோழகங்க ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அப்பகுதியை தூர்வாரி படகு சவாரி செய்யும் வகையில் சுற்றுலா தலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும். நான்கு ரோடு பகுதியில் உயர்மட்ட கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.  புதிய பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பிட வசதி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நான்கு ரோட்டு பகுதியில் கழிப்பறை கட்டித் தர வேண்டும். அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே முன்பு  இருந்தது போல் அனைத்தையும் தரைத்தளத் தில் கொண்டு வந்து, நோயாளிகளின் நலனை  பாதுகாக்க வேண்டும்.  பெயரளவுக்கே அரசு தலைமை மருத் துவமனையாக இருக்கும் ஜெயங்கொண் டம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமித்து, அனைத்து உபக ரணங்களுடன் அவசர சிகிச்சை செய்யும் வகையில் தரம் உயர்த்த வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

;