districts

img

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீரில் மூழ்கிய பயிர்கள்; போக்குவரத்து துண்டிப்பு

அரியலூர், ஆக.6 - மேட்டூர் அணையில் இருந்து வினா டிக்கு 2.10 கனஅடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம்  கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ள  இரண்டு லட்சம் கனஅடி உபரி நீரால்  அரியலூர் மாவட்ட மக்கள் பாதிக்காத  வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மேலும் ஆற்றின் கரை யோரத்தில் விவசாயிகள் சாகுபடி  செய்துள்ள பயிர்கள் குறித்து முழு விவ ரங்களையும் அடங்களில் சேர்க்க சம்பந் தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொள்ளிடத்தி லிருந்து வந்த அதிகப்படியான நீரால் கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள  நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் நடவு செய்து சில நாட்களான வயல்களும் நீரில் மூழ்கியதால் விவ சாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள் ளனர். எனவே விவசாய நிலங்களை கண்டறிந்து உரிய இழப்பீடு வழங்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.
நீர் வெளியேற்றம்
உபரி நீரானது திருச்சி கல்ல ணைக்கு வந்த நிலையில், அரியலூர்  மாவட்ட கொள்ளிடம் ஆற்றில் திறக்கப் பட்டு கடைமடை பகுதியான அணைக் கரை கீழணை பகுதிக்கு 1,56,246 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில்  60 மதகுகள் வழியாக 1,55,823 கனஅடி  நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தி னால் பாலத்தின் நலன் கருதி போக்கு வரத்து குறைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துண்டிப்பு
கொள்ளிடத்தில் உபரி நீர் திறக்கப் பட்டுள்ளதால், கொள்ளிட கரையை ஒட்டியுள்ள கீழ ராமநல்லூர் கிராமத்திற் கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக் கப்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும்  வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால், கிரா மத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடும் பங்களை சேர்ந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும், இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப் பட்டிருந்த விவசாய நிலங்கள் தண்ணீ ரில் மூழ்கியுள்ளன.
ஆட்சியர் தகவல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அணைக்குடி, முத்துவாஞ்சேரி பகுதி களில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை பாது காப்பாக முகாம்களில் தங்க வைத்து,  உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்துதர அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார். அரியலூர் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் ஏற்பட்ட  பயிர் சேத, கால்நடை சேத விபரங்கள்  குறித்து, மழைநீர் வடிந்த பிறகு கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்  பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

;