districts

img

வேப்பூரில் நியாய விலைக் கடைகளை திருமாவளவன் எம்.பி., திறந்து வைத்தார்

பெரம்பலூர், நவ.6 - பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட அத்தியூர், துங்கபுரம், பெரிய வெண்மணி கிராமங்களில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடைகள், பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி நிறுத்தம் உள்ளிட்ட ரூ.44 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்   தொல்.திருமாவளவன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.  மேலும், நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணவுப் பொருட்கள் விநியோகத்தை வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தரராமன், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் இளஞ்செல்வி, கூட்டுறவு சார் பதிவாளர்கள் ராஜேஷ், ராஜதுரை, சங்க செயலாளர் பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.