districts

திருச்சி முக்கிய செய்திகள்

மக்கள் தொடர்பு முகாம்

புதுக்கோட்டை, செப்.29 - புதுக்கோட்டை வரு வாய் கோட்டம், கந்தர்வ கோட்டை வட்டம், புனல் குளம் வருவாய் கிராமத்தில்  09.10.2024 (புதன்) அன்று  காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெறவுள்ளது. இதனை யொட்டி 01.10.2024 அன்று முதல் பொது மக்களிடமிருந்து முன்  மனுக்கள், தெத்துவா சல்பட்டி கிராம சமுதாயக் கூடத்தில் பெறவுள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பய னடையுமாறு மாவட்ட நிர் வாகம் தெரிவித்துள்ளது.

மனுக்கள் அளிக்க பொதுமக்களுக்கு அழைப்பு

பெரம்பலூர், செப்.29- பெரம்பலூர் மாவட்டம்,  சத்திரமனை கிராமத்தில் அக்.9 அன்று மாவட்ட  ஆட்சியரின் தலைமை யில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.  அதற்காக பொதுமக்க ளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வரு கிறது. எனவே, சத்திர மனை மற்றும் அதனைச்  சுற்றியுள்ள கிராமங்க ளைச் சேர்ந்த பொது மக்கள் தங்களது கோரிக் கைகள் தொடர்பான மனுக் களை சத்திரமனை கிராம  நிர்வாக அலுவலர் அலுவ லகத்தில் முகாம் நடைபெ றும் நாளிற்கு முன்ன தாகவே அளித்து பயனடை யுமாறு மாவட்ட நிர்வாகத் தின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிபிஎம் புதிய கிளை அமைப்பு

தஞ்சாவூர், செப்.29 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம், வைத்தியநாதன்பேட்டை கிராமத்தில், 20-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  இதனையடுத்து கொடி யேற்று நிகழ்ச்சி சிபிஎம்  திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப் பினர் கே.பக்கிரிசாமி கட்சிக்  கொடி ஏற்றி வைத்து பேசி னார். ஒன்றியக் குழு  உறுப்பினர் எம்.கதிரவன்  மற்றும் கிளை உறுப்பி னர்கள் கலந்து கொண்ட னர். புதிய கிளை பொறுப் பாளராக கேசவமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

வி.ச., வி.தொ.ச சிறப்பு பேரவை

மயிலாடுதுறை, செப்.29 - மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகேயுள்ள டி.மணல் மேட்டில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கங்களின் தரங்கம்பாடி, செம்பனார் கோவில் ஒன்றியங்களின் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.  பேரவைக்கு இரு சங்கங்களின் ஒன்றிய தலைவர்கள் எம்.கணே சன், தோட்டம் ஜி.ஜோதி, என்.பாலகிருஷ்ணன், ஜி. கருணாநிதி ஆகியோர் தலைமை வகித்தனர். விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின், விவசாய சங்க  மாவட்ட செயலாளர் எஸ். துரைராஜ், மாவட்ட தலை வர் டி.சிம்சன், மாநிலக்குழு  உறுப்பினர் ப.குணசுந்தரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல், ஒன்றிய செய லாளர்கள் பேசினர்.

போதைப் பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை, செப்.29 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் வணிக வியல் துறை மாணவர்கள் அமைப்பு சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது. வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் சேவியர் செல்வ குமார் தலைமை வகித்தார். கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணியை வட்டாட்சி யர் மகேஷ், கல்லூரி முதல்வர் முனைவர் ஜான்சன் ஜெயக்குமார், பொறையார் காவல் ஆய்வாளர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக  சென்ற பேரணி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. முன்னதாக கல்லூரி  வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை  விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவாரூர், செப்.29 -  திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று  வரும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய  மேலாண்மை இயக்குநர் வி.தெட்சிணா மூர்த்தி கள ஆய்வு மேற்கொண்டார்.  திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப் பட்டு வரும் 667 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தினை தமிழ்நாடு குடிநீர்  வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர், கொள்ளிடம் ஆற்றில் வடுகக்குடியில் அமைக்கப்பட்டு வரும் தலைமை நீரேற்று நிலையம் முதல் திருத்துறைப்பூண்டி ஒன்றி யத்தின் கடைக்கோடி பயனாளிகளுக்கு அமைக்கப்பட்டு வரும் நீர் சேகரிப்பு கட்ட மைப்பு வரை பல இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க  அலுவலர்களுக்கு உத்தரவு விட்டுள்ளார்.  இத்திட்டம், கொள்ளிடம் ஆற்றை நீர்  ஆதாரமாக கொண்டு ரூ.1127.20 கோடியில்  ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர்  விகிதத்தில் 5.23 லட்சம் மக்கள் பயன்பெ றும் வகையில் 32.55 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.  கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டு வருகிற 3 நீர் சேகரிப்பு கிணறுகள், வடுகக் குடியில் அமைக்கப்பட்டு வருகிற தலைமை நீரேற்று நிலையம் 18.10 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, நல்லூரில் அமைக்கப்பட்டு வருகிற நீர் உந்து நிலையம், 18.10 லட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டி, அம்மையப்பனில் 12.85 லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டி, ஓகை பேரையூரில் நீர் உந்து நிலையம், 4.70 லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டி ஆகிய வற்றினை கள ஆய்வு செய்து இத்திட்டப்  பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து  பிப்ரவரி 2025-க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை  திரும்பப் பெற வலியுறுத்தல்

திருவாரூர், செப்.29 - சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு)  திருவாரூர் மாவட்ட ஆண்டு பேரவை திருவாரூர் மாவட்ட அலு வலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  பேரவைக்கு மாவட்ட தலைவர் கே.ஜே.ஆர்.அப்துல் காதர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா துவக்க உரையாற்றினார். மாவட்டச் செய லாளர் டி.முருகையன் புதிய நிர்வாகிகளை அறிவித்து நிறை வுரையாற்றினார். முன்னதாக அமைப்பின் மாவட்ட துணைச்  செயலாளர்கள் எஸ்.வைத்தியநாதன், கே.பி.ஜோதிபாசு ஆகி யோர் உரையாற்றினர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். ஆன்- லைன் முறையில் அபராதம் போடுவதை தமிழக அரசு ரத்து  செய்ய வேண்டும். கட்டுமான நல வாரியத்தில் உள்ளது போல  விபத்து நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். நல வாரிய சலுகைகளை அதிகப்படுத்தி காலதாமதம் இல்லாமல்  தர வேண்டும். இன்சூரன்ஸ், எப்சி கட்டணத்தை குறைத்திட  வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைவருக்கும் நல வாரிய பதிவு செய்ய அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில் மாவட்டத் தலைவராக கே.ஜே.ஆர். அப்துல்  காதர், செயலாளராக எம்.கே.ஜெய்சங்கர், பொருளாளராக எஸ்.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அக்.2 தஞ்சை மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம் 

தஞ்சாவூர், செப்.29 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில்,  அக்.2 காந்தி ஜெயந்தி தினத்தன்று நடைபெற உள்ள கிராம  சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்கு மாறு, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்.2 (புதன்கிழமை) காந்தி ஜெயந்தி தினத்தன்று காலை  11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம  ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடைபெற வுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி களின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க வுள்ளனர். எனவே, இக்கிராம சபைக் கூட்டத்தில் தஞ்சா வூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.

தீவன மேலாண்மை பயிற்சி

பாபநாசம், செப்.29 - அட்மா திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்  அருகே மேல கபிஸ்தலத்தில் கால்நடை தீவன மேலாண்மை பயிற்சி நடந்தது.  கால்நடை உதவி மருத்துவர் மகேந்திரன், கால்நடை களுக்கான தீவனப் புல் வளர்ப்பு, அசோலா வளர்ப்பு,  பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட் பங்கள், கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டு மேலாண்மை  பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். இதில் பாப நாசம் வேளாண்மை உதவி இயக்குநர் முகமது பாரூக்,  வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம்  அய்யம் பெருமாள், தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட  ஆலோசகர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களை மகிழ்விக்க திரைப்படம் திரையிடல்

பெரம்பலூர், செப்.29 - பெரம்பலூர் சார் ஆட்சியர் சு.கோகுல், பல்வேறு பணி களுக்காக ஆய்வுக்கு சென்ற பொழுது அரசுப் பள்ளி ஒன்றில், பெற்றோரை இழந்த மாணவ, மாணவியருடன் கலந்து உரையாடினார். அப்பொழுது திரையரங்கம் மற்றும் திரைப்படம் குறித்த கேள்விக்கு சில மாண வர்கள், தாங்கள் இதுவரை திரையரங்கையே பார்த்த தில்லை என்று தெரிவித்தனர். அதனடிப்படையில் அவர்களின் ஆசையை நிறை வேற்றும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  அரசுப் பள்ளிகளில் பயிலும் பெற்றோர்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு ஞாயிறன்று காலை 11 மணிக்கு  பெரம்பலூர் கிருஷ்ணா திரையரங்கில் திரைப்படம் பார்க்க  ஏற்பாடு செய்யப்பட்டது. இத்திரைப்படத்தை காண வருகை தந்த மாணவ, மாணவியரிடம் சார் ஆட்சியாளர் கலந்துரையாடி, மாணாக் கர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தார். மாணவர்கள்  அனைவரும் ஆர்வமுடன் திரைப்படத்தை பார்த்தனர்.

திருக்களாச்சேரியில் இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறை, செப்.29 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் அருகேயுள்ள  திருக்களாச்சேரியில் உள்ள ஹமீதியா அரசு உதவி பெறும் பள்ளியில் இலவச பொது மருத்துவ மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சமூக ஆர்வலர்  பாரிஸ் மாசா அலி தலைமை வகித்தார்.  அறங்காவலர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்றார். முகா மில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு  இலவச பொது மருத்துவ முகாமை துவங்கி வைத்தார்.  முகாமில் காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவ மனை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சர்க்கரை நோய்,  மகளிர் மருத்துவம் எலும்பு முறிவு, குழந்தைகள் நல மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம்,  காது மூக்கு தொண்டை  மருத்துவம், காது கேளாமை சிகிச்சை, பேச்சு திறன் பயிற்சி, செவித்திறன் சிகிச்சை, பிசியோதெரபி உள்ளிட் டவைகளுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கினர். முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம்,  இசிஜி போன்றவை எடுக்கப்பட்டது. ஏராளமான பொது மக்கள், சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று பயன டைந்தனர். 

கும்பகோணம் அரசு கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா

கும்பகோணம், செப்.29- தஞ்சை மாவட்ட சுற்றுலாத் துறையும், கும்பகோணம்  ஆடவர் கல்லூரியின் இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலா வியல் துறையும் இணைந்து உலக சுற்றுலா தின விழாவை நடத்தின. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அ.மாதவி தலைமை வகித்தார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்ப ழகன் சிறப்புரையாற்றி கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டி களில் பங்கேற்று வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி னார். கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமி ழழகன், வேதியியல் துறைத்தலைவர் மா. மீனாட்சி சுந்தரம், தேர்வு நெறியாளர் இரா.சா. சுந்தரராசன், சகஸ்ரா  கல்விக் குழும தலைவர் வீரமணி, ராம்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 351 பேருக்கு பணி நியமன ஆணை

பெரம்பலூர், செப்.29 - தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் தனியார்  துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது. இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் என 2,349 பேர் கலந்து  கொண்டனர். முகாமில் வேலைவாய்ப்பு வழங்க கூடிய  தமிழகத்தின் முன்னணி நிறுவனங்கள், உள்ளூர் தொழில்  நிறுவனங்கள் என மொத்தம் 63 நிறுவனங்கள் பங்கேற்றன.  இந்நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 351 பேருக்கு  மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பணி நியமன ஆணை களை வழங்கினார். இந்த தனியார்  துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரு வதற்கு ஏதுவாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம்  மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து முகாம் நடை பெறும் இடத்திற்கு இலவச சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

உலக வெறிநோய் தினம் நாய், பூனைகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி 

தஞ்சாவூர், செப்.29 -  தஞ்சாவூர் கால்நடைப் பன்முக மருத்துவ மனையில், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், உலக வெறிநோய் தினம் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து சனிக்கிழமை துவக்கி வைத்தார். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு, மருத்து வமனையின் செயல்பாடுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக் கையில், “வெறிநோய் கடிக்கான மருந்தை கண்டுபிடித்த அறிவியல் அறிஞர் “லூயி பாஸ்டர்” அவர்களை கௌரவிக்கும் விதமாக  2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும்  செப்டம்பர் 28 ஆம் தேதி உலக வெறிநோய் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் ரேபிஸ் நோயால் உயிரிழந் தோர் எண்ணிக்கை 60 ஆயிரம் பேர் எனவும், இந்திய அளவில் 20 ஆயிரம் பேர்  எனவும், உயிரிழப்பில் 45 சதவீதம் இந்தியா  உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நிகழ்கிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.  2030 ஆம் ஆண்டுக்குள் இந்நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற குறிக் கோளை உலக சுகாதார நிறுவனம் முன் வைத்துள்ளது. உலக வெறிநோய் தினத்தை  முன்னிட்டு தஞ்சாவூர் கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்டத் திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவ மனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் காலை 8 மணி முதல் 12 வரை 3 மாதங்களுக்கு  மேற்பட்ட வயதுடைய நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.  பொதுமக்கள் இந்த வாய்ப்பினை  பயன்படுத்தி தங்கள் செல்லப்பிராணி களுக்கு அருகிலுள்ள கால்நடை மருத்து வமனைகளில் வெறிநோய் தடுப்பூசி போட்டுக்  கொள்ள வேண்டும்” என்றார்.

ஐந்து தலைப்பு வாய்க்கால் முதல் ஆடுதுறை வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியை விபத்தில்லா  பகுதியாக மாற்ற வேண்டுகோள்

கும்பகோணம், செப்.29-  தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கும்பகோணம் அருகே உள்ள ஐந்து தலைப்பு வாய்க்கால் முதல் ஆடுதுறை வரையிலான நெடுஞ்சாலைப் பகுதிகளில், சாலை விபத்துகளை குறைக்கும் முயற்சியில் காவல்துறையுடன் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, வட்டார போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோருடன் காவல்துறையினர் இணைந்து சாலையில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்து விபத்துகளுக்கான காரணங்களை கேட்டறிந்து விபத்துகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இதில் தன்னார்வலர்களான என்சிசி மாணவர்கள், 20 கிலோ மீட்டர் தொலைவு வரையுள்ள வணிகர்கள், பொதுமக்கள், அலுவலகங்களுக்கு செல்வோர், பல்வேறு வேலைகளுக்கு செல்வோர் மற்றும் மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம், சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறிவுறுத்தினர். மேலும் எதிர்வரும் காலங்களில் சாலையில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்திடவும், சாலையில் உள்ள குறைபாடுகளை விரைந்து சரி செய்திடவும், பொதுமக்கள் சாலை விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்து செல்லவும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஐந்து தலைப்பு வாய்க்கால் முதல் ஆடுதுறை வரையிலான நெடுஞ்சாலை பகுதியை “விபத்தில்லா பகுதி” (ZERO ACCIDENT ZONE) ஆக மாற்றி, உயிர் சேதம் ஏதும் இல்லாமல் தடுத்திட அனைவரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

உலக இதய தினம் பெரம்பலூரில் மாரத்தான் பந்தயம்

பெரம்பலூர், செப். 29 - பொதுமக்கள் மத்தியில் இதய ஆரோக்கி யம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் நலத்தை காக்கும் வழிமுறைகளைப் பிரபலப்படுத்தும் வகையிலும் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர், தனலட்சுமி சீனிவா சன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை சார்பாக உலக இதய தினத்தை யொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டப்பந்தய  போட்டிக்கு  தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்  பச்சேரா, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்  கல்லூரி நிர்வாக இயக்குநர் நீவாணி கதிர வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சி யர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து தொடங்கி  வைத்தார். இந்த ஓட்டம், 6 கிலோ மீட்டர்,  12 கிலோ மீட்டர் மற்றும் 21 கிலோமீட்டர் தூரம் என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. மாரத்தானில் வெற்றி பெற்றோருக்கு மொத்த மாக ரூ.4 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப் பட்டது. தூரம் முழுவதையும் கடந்து வரும் ஒவ்வொருவருக்கும் பதக்கம் மற்றும் மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் டி-ஷர்ட், கேப், மற்றும் ஈ-சான்றிதழ் வழங்கப் பட்டது. மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் வள்ளி, தனலட்சுமி சீனிவாசன் குழும நிதி அலு வலர் ராஜசேகர் உள்பட 2000-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்
ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை

கரூர், செப்.29 -  ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்ட பேரவை சிஐடியு  கரூர் மாவட்ட குழு அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் என்.ரங்கராஜ் தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம்  சிறப்புரையாற்றினார். ஆட்டோ சங்க  மாவட்டச் செயலாளர் வி.பாலசுப்பிரமணி யன் வரவு, செலவு அறிக்கையை முன்வைத் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. முரு கேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் எம். சுப்பிரமணியன், ஆர்.ஹோச்சுமின், டாஸ்மாக் சங்கம் மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது ஆகியோர்  பேசினர். ஆட்டோ சம்மேளன மாநில துணைத்  தலைவர் என்.பாண்டியன் கூட்டத்தை நிறைவு செய்து பேசினார். கௌரவத் தலைவர் எம்.தண்டபாணி, மாவட்டத் தலைவர் என்.ரங்கராஜ், மாவட்டச்  செயலாளர் ப.சரவணன், மாவட்டப் பொரு ளாளர் மாரிமுத்து ஆகியோர் புதிய நிர்வாகி களாக தேர்வு செய்யப்பட்டனர். தொழிலாளர் நல வாரியத்தில் வீடு கட்டுவ தற்கு ரூ.4  லட்சம் வழங்குவது போல  அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத் திலும் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.  2019 புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்‌. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டர் கட்டணத்தை உயர்த்தி  வழங்க வேண்டும். ஆன்-லைன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டீசல், பெட்ரோல் மானியம்  வழங்க வேண்டும். புதிய ஆட்டோ வாங்கு வதற்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.