தஞ்சாவூர், நவ.23 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து, தமிழ்க்கூடல் மாநாட்டை நடத்தின. மாநாட்டுக்கு துணைவேந்தர் (பொ) சங்கர் தலைமை வகித்தார். அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் துரை சாமி வரவேற்றார். விழாவைத் தொடக்கி வைத்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ. சாமிநாதன் உரையாற்றினார். முன்னதாக மாநாட்டு மலரினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பெற்றுக் கொண்டார். விழாவில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திரு வையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சா வூர்), தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராம நாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.