தஞ்சாவூர், நவ.8 - தஞ்சாவூர் மாவட்ட டேபிள் டென்னிஸ் விளை யாட்டு கழகம் சார்பில், ஏழாவது மாநில டேபிள் டென்னிஸ் ரேங்கிங் விளை யாட்டுப் போட்டிகள் வெள்ளிக் கிழமை தொடங்கியது. தஞ்சாவூர் அனிதா பார்த்திபன் உள்விளை யாட்டு அரங்கத்தில் தொ டங்கிய இந்த விளையாட்டு போட்டியை மாவட்ட விளை யாட்டு அலுவலர் ஜெ.டேவிட் டேனியல் தொடங்கி வைத் தார். தொடக்க விழாவுக்கு வந்தவர்களை விளை யாட்டு கழகத்தின் இணைச் செயலாளர் பி.ராதா கிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்வில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் மாநில பொரு ளாளர் பி.பி.பாஸ்கர், தஞ்சா வூர் மாவட்ட டேபிள் டென் னிஸ் கழக தலைவர் எம்.என்.முகமதுரபீக், துணைத் தலைவர்கள் கலந்து கொண்ட னர். இந்த போட்டியில் 11 வயதுக்குட்பட்டவர்கள், 13, 15, 17, 19 மற்றும் அதற்கு மேற் பட்டவர்கள் என 6 பிரிவு களின்கீழ், ஆண்கள், பெண் களுக்கு என தனித்தனி யாக போட்டிகள் நடைபெறு கின்றன. சென்னை, கோவை, திருச்சி, திரு நெல்வேலி, தஞ்சாவூர் என மாநிலம் முழுவதிலுமிருந்து 1,300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடி வரு கின்றனர். இந்த போட்டிகள் நவ.10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. போட்டி களில் வெற்றி பெறுபவர்கள் ரேங்கிங் அடிப்படையில் தேசிய அளவிலான போட் டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தொடர்ந்து நவ.10 அன்று நடைபெறவுள்ள பரி சளிப்பு விழாவில் உயர்கல் வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பரிசுகளை வழங்க உள்ளார்.