districts

திருச்சி முக்கிய செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்

அரியலூர், நவ.23 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை அரசு மேல்நி லைப் பள்ளியில் சினேகம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.  முன்னதாக மாவட்ட இணை செயலாளரும் சாசனத்  தலைவருமான சிவக்குமார் வர வேற்றார். நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் ஜேசுராஜ் முன்னிலை வகித்தார். முகாமை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வி.கே. அய்யா தொடங்கி வைத்தார்.  முகாமில் 75 பெண்கள் உட்பட 200 பேர் மருத்துவ பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட னர். இதில் ஆண்கள் 27 பேரும், பெண்கள் 13 பேரும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு பாண்டிச் சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர்.  நிகழ்ச்சியில் கவுன்சிலர் பிருதிவிராஜன், வட்டார தலை வர் கொடியரசு, செயலாளர்கள் குமார், செந்தில்குமார் மற்றும்  மருத்துவ குழுவினர். பொது மக்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் பட்டுச்செல்வன் நன்றி கூறினார்.

மான் இறைச்சி வைத்திருந்த  4 பேர் கைது

பெரம்பலூர், நவ.23- பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் வனச்சரக பணி யாளர்கள் தனிக்குழுவாக இணைந்து சித்தளி பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தே கத்தின் பேரில் நின்று கொண்டி ருந்தவர்களை பிடித்து விசா ரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சித்தளியைச் சேர்ந்த அசோக் குமார் (32), ஆலம்பாடியைச் சேர்ந்த முருகேசன் (44), திருச்சி மாவட்டம், பி.கே அக ரத்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் ராஜா(32), பாலமுருகன் ஆகி யோர் என்பதும், அசோக்குமார் மற்றும் முருகேசன் ஆகி யோர் வெட்டப்பட்ட மான் இறைச்சி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த மான் இறைச்சியை பறிமுதல் செய்து  அவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் ரூ. 2 லட்சம் அபராதம் தொகை செலுத்திய இருவரும் விடு விக்கப்பட்டனர்.  இதுகுறித்து வனத்துறை யினர் வன உயிரின குற்றப் பிரி வின்கீழ் வழக்குப் பதிந்து வில்லியம்ஸ் ராஜாவை கைது  செய்து, பெரம்பலூர் குற்றவி யல் நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய பாலமுருகனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

திருச்சிராப்பள்ளி, நவ.23 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2024 ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகு படி செய்யும் விவசாயிகள் மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு தேர்வு  செய்யப்பட்டுள்ள கிராமங்க ளில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். 2024 ஆம் ஆண்டு ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடிக்கு 30.11.2024 வரை விண்ணப்பித்து, பிரிமியம் தொகையாக வெங்காயப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2063 -ஐ அரசு பொது சேவை மையங் கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கள் வாயிலாக செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

நவ.26 அரியலூரில் அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர், நவ.23 - அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளின் கூட்டம் அரியலூரில் ஏஐடியுசி  அலுவலகத்தில், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் டி.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் ஏஐடியுசி த.தண்டபாணி, து.பாண்டியன், தொமுச பி.வி.அன்பழகன், சிஐடியு பி.துரைசாமி, ஆர்.சிற்றம்பலம், ஹெச்.எம்.எஸ் எஸ்.ராமசாமி உள்ளிட்ட மத்திய  சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர் விரோத, விவசா யிகள் விரோத, மக்கள் விரோத, பெருநிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை கடைப்பிடிப்பது தொடர்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி-ஐ நீக்க வேண்டும்.  குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.26 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நவ.26 அன்று நாடு தழுவிய ஒருங்கிணைந்த போராட்டம் நடத்திட மத்திய தொழிற்சங்கங்கள் - ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) முடிவு செய்துள்ளது. இதையொட்டி நவ.26  அன்று, அரியலூர் அண்ணா சிலை அருகில் மாலை 4 மணி யளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இளம் வாக்காளர்களை  சேர்க்க விழிப்புணர்வு

பெரம்பலூர், நவ.23 -  பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வெள்ளிக்கிழமை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் வழங்கப்பட்டு, வாக்காளர் சேவைக்கான செயலி மூலம் தங்கள் தகவல்களை பதிவு செய்து, வாக்காளர்களாக தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான  விளக்கங்களும், செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.  மேலும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளி யிடப்பட்டுள்ள வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் செயலி மூலம் வாக்காளர்களாக பதிவு செய்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு காணொளி மாணவ, மாணவியர்களுக்கு திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இம்முகாமில் பங்கேற்ற 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  தேர்தல் வட்டாட்சியர் அருளானந்தம், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பருவமழையை எதிர்கொள்ளத் தயார்: புதுகை ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை,  நவ.23 - புதுக்கோட்டை மாவட் டத்தில் பருவமழையை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சி யர் மு.அருணா தெரி வித்தார்.  புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “புதுக் கோட்டை மாவட்டத்தில் இது வரை ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 642 தங்க வைப்பு மையங்கள் அமைத்திருக்கிறோம். அவை மழைக்காலம் முடி யும் வரை செயல்படும். இந்த  மையங்களில் உணவு, உடை உள்ளிட்டவற்றை வழங்க வும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரி விக்கலாம். 12 வட்டங்களி லும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்கா ணிப்பு அலுவலர்களும் நிய மிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலத்தில் காய்ச்சல் உள்ளிட்ட தொ ற்றுநோய்ப் பரவலைக் கண்டறியும் வகையில்  காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படு கின்றன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட அரசு மருத்துவ மனைகளில் சிறப்பு வார்டு கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் தற்போதைக்கு 2 டெங்கு தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 1791 அங்கன்வாடி மை யங்கள் செயல்பட்டு வரு கின்றன. இவற்றில் பழு தடைந்த கட்டடங்களைக் கொண்ட அங்கன்வாடி மையங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப் பட்டு, 182 மையங்களுக்கான புதிய கட்டடங்கள் கட்டு வதற்கான பணிகள் தொடங் கப்பட்டுள்ளன” என்றார்.

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு  திட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, நவ.23 - ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்க்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆற்றுப்படுத்துநர் (1 பணியிடம்) : தொகுப்பூதியம் - ரூ.18,536 (ஒரு மாதத்திற்கு), சமூகப்பணி. இதற்கு, சமூகவியல், உளவியல், பொது நலம் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் (10+2+3 மாதிரி) பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆற்றுப்படுத்துதல் மற்றும் தொடர்பு  பிரிவில் முதுகலை பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும். அரசு, தொண்டு நிறுவனத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பணியில் ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். 31.10.2024  அன்றுபடி 42 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. விண்ணப்படிவத்தினை https://tiruchirapalli.nic.in என்ற இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கல்விச் சான்றுகளின் நகல், சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல்களை இணைத்து, பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்கள் 7.12.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, என்.இ.1-முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சி ராப்பள்ளி - 620 001 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால்  மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம் என  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.

புதுக்கோட்டையில்  ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, நவ.23 -  தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ரமணி கொல்லப் பட்டதைக் கண்டித்து, ஆசிரியர்களுக்கு பணிப் பாது காப்பு வழங்கக் கோரியும் புதுக்கோட்டையில் இரு கூட்ட மைப்புகள் சார்பில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல கம் அருகே, தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் வீ.ஜோதிமணி, சு.தவமணி, ஜீவன்ராஜ், திருப்பதி ஆகியோர் தலைமை வகித்தனர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் நா. சண்முகநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதேபோல, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்ட மைப்பின் மாவட்ட அமைப்பாளர் தனராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் துணைப் பொதுச் செய லர் மா.குமரேசன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழ கத்தின் பிரச்சாரச் செயலர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

கஞ்சா விற்ற நான்கு பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

தஞ்சாவூர், நவ.23 -  தஞ்சாவூரில் கஞ்சா, போதைப் பொருள் விற்ற நான்கு பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையப் பகுதிக்குட் பட்ட ராஜகோரி சுடுகாடு அருகே, கடந்த மார்ச் 15 ஆம் தேதி தஞ்சாவூர் வடக்கு வாசல் பாலகணபதி(23), வசந்தகுமார் (26), சூரியகுமார் (24), தஞ்சாவூர் காந்தி புரம் கவிப்பிரியன் (21) ஆகியோர் விற்பனைக்காக 1 கிலோ 110 கிராம் கஞ்சாவை வைத்திருந்தனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் ராஜ்கமல் மற்றும் காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சாவை மீட்டனர். இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் கூடுதல் அமர்வு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் தலா 5 ஆண்டு கள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம்  விதித்தும் தீர்ப்பளித்தார்.

நீடாமங்கலத்தில் ஆட்சியர் கள ஆய்வு

திருவாரூர், நவ.23 - திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.  திருவாரூர் மாவட்டத்தில் 2024 நவம்பர் மாதத்திற் கான முகாம் நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதி யில் நவ.21 காலை 9 மணி முதல் நவ.22 காலை 9 மணி  வரை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கி கள ஆய் வில் ஈடுபட்டதுடன், அரசின் அனைத்து நலத்திட்டங்க ளும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.   அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு,  நீடாமங்கலம் முதல்நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.  ஆய்வின் போது, நீடாமங்கலம் வட்டாட்சியர் தேவகி, ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ் செல்வன், பேரூராட்சித் தலைவர் ராம்ராஜ், செயல் அலுவ லர் கலியபெருமாள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதி நிதிகள் உடனிருந்தனர்.